செக்ஸ் புகார்: சந்திரகாந்தாவை நீக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்
சென்னை:
பழனி அரசு மகளிர் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியது தொடர்பாகஅக்கல்லூரி முதல்வர் சந்திரகாந்தாவை உடனே பதவி நீக்கம் செய்யக் கோரி தமிழகம் முழுவதும்உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு ஐந்துநட்சத்திர அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக "நாக்" என்ற குழுவினரைமத்திய அரசு நியமித்திருந்தது.
தன் கல்லூரிக்கு எப்படியாவது ஐந்து நட்சத்திர அந்தஸ்தை வாங்கிவிட வேண்டும் என்பதற்காகசந்திரகாந்தா இந்தக் குழுவினரை மகிழ்ச்சிப்படுத்த தன் கல்லூரி மாணவிகள் சிலரையே பாலியல்பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
"நாக்" குழுவில் உள்ள ஆண் உறுப்பினர்களுடன் "சந்தோஷமாக" இருக்குமாறு கூறி சந்திரகாந்தாவேஅனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இக் கல்லூரியின் விடுதிகளில் இரவு நேரத்தில்கார்கள் வந்து நிற்பதும் அதில் கல்லூரி காவலாளி சில மாணவிகளை அழைத்துச் செல்வதும் கூடநடந்துள்ளது.
இவையெல்லாம் சந்திரகாந்தா சொல்லித் தான் நடந்ததாகவும், மாணவிகளை அவர் பலவிஷயங்களில் தவறாகப் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அக் கல்லூரியில் பெரும் போராட்டம் வெடித்தது. பழனி அரசு கல்லூரி மாணவிகள்தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தமாவட்ட வருவாய் அதிகாரிக்கு (ஆர்.டி.ஓ.) தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆர்.டி.ஓவும் இது தொடர்பாகத் தன்னுடைய விசாரணை முழுவதையும் நடத்தி முடித்து விட்டார்.இன்று அவர் தன்னுடைய அறிக்கையை திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிப்பார் என்றுதெரிகிறது.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் பதவியை விட்டு சந்திரகாந்தாவைத் தூக்கி எறியுமாறும்,பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறும் கோரி தமிழகம் முழுவதும் இன்றுகல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புக்களைப் புறக்கணித்துபோராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய மாணவர் பேரவை ஏற்கனவே அழைப்புவிடுத்திருந்தது.
அதன்படி இன்று காலை சென்னையில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் சைதாப்பேட்டையிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று போராட்டம்நடத்தினர். சந்திரகாந்தாவை உடனே கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும்என்று கோஷங்களை எழுப்பினர்.
ஊர்வலத்தின் முடிவில் ஆளுநர் மாளிகைக்குள் சென்ற மாணவர்களின் பிரதிநிதிகள் இதுதொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் ராஜ் பவன் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.
சென்னை-மாநிலக் கல்லூரி மாணவர்களும் தனியே போராட்டம் நடத்தினார்கள். சந்திரகாந்தாவுக்குஎதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
அதே போல திருச்சியில் உள்ள அரசு ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில்குதித்தனர். தங்கள் வகுப்புக்களை அவர்கள் புறக்கணித்து விட்டு வந்து அவர்கள் போராட்டம்நடத்தினர். அப்போது சந்திரகாந்தாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மதுரை, கோவையிலும் பல கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மதுரை மாவட்ட அரசியல் பிரமுகரான ராஜன் செல்லப்பாவின் சகோதரி தான் சந்திரகாந்தா. இவர்மதுரை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்தபோதும் இவர் மீது பல புகார்கள் எழுந்ததுகுறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications