ஆப்பிரிக்க காங்கிரசுடன் புலிகள் தீவிர ஆலோசனை
கொச்சி:
விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தை எப்படி அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது குறித்துஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுதற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டும் ஒருஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. ஒரு சில சம்பவங்களைத் தவிர இலங்கையில் தற்போது கிட்டத்தட்டமுழு அமைதி திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேஅமைதிப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன. நார்வே தூதுக்குழுவினர் பேச்சுவார்த்தைகளை மிகவும் சுமூகமாக நடத்த உதவி வருகின்றனர்.
இதற்கிடையே இலங்கையில் முழு அமைதி திரும்பும் பட்சத்தில் முழு நேர அரசியலில் குதிப்பதுகுறித்தும் புலிகள் தீவிரமாக யோசித்து வருகின்றனர். ஆனால் தீவிர அரசியலில் நுழையவேண்டுமென்றால் அவர்கள் தங்களிடமுள்ள ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டாகவேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டே வாழ்ந்து வந்த புலிகள்அவற்றை அவ்வளவு எளிதாகக் கீழே போடத் தயாராக இல்லை. இது தொடர்பாகப் பல்வேறுதரப்பினருடனும் அவர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.
அதன்படி தற்போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடனும் புலிகள் ஆலோசித்துவருகின்றனர். இந்தக் கட்சியும் முன்னர் விடுதலைக்காகப் போராடிய தீவிரமான அமைப்பாகத்தான்செயல்பட்டு வந்தது.
இந்த அமைப்பை உருவாக்கிய முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா இதற்காக30 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போதுமுழு நேர அரசியல் கட்சியாகவே அந்த அமைப்பு மாறிவிட்டது.
புலிகளும் தங்களுடைய 20 ஆண்டு கால வரலாற்றில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை எப்போதும்ஆதரித்து வந்துள்ளனர். ஒரு முறை பிரிட்டனில் தங்களுடைய இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டபோது தங்களுடைய தலைமையகத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விடலாமா என்று கூடபுலிகள் யோசித்து இருந்தனர்.
இந்நிலையில்தான் ஆயுதங்களைக் கைவிட்டு எப்படி அரசியலில் குதிப்பது என்று தங்களுக்குஉதவுமாறு கோரி அக்கட்சியுடன் புலிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளம் உள்ளது என்று புலிகள்நினைக்கின்றனர். இது தொடர்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு சிறப்பு குழு ஒன்றையும் அனுப்பபுலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications