அல்-கொய்தாவுடன் பாக். ராணுவ மேஜருக்கு தொடர்பு?
இஸ்லாமாபாத்:
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா இயக்கத்திற்கும் பாகிஸ்தான்ராணுவ மேஜர் ஒருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அவரிடம் அந்நாட்டு அதிகாரிகள்துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் பெரும் தாக்குதலை நடத்தி 5,000பேர் வரை உயிரிழக்கக் காரணமான காலித் ஷேக் முகமது உள்பட இரண்டு அல்-கொய்தாதீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. அதிகாரிகள் பாகிஸ்தான் உளவு அமைப்புடன்சேர்ந்து ராவல்பிண்டியில் அவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அல்-கொய்தாபயங்கரவாத இயக்கத்தில் பின் லேடனுக்கு அடுத்தபடியாக இருந்தவன்தான் முகமது.
இவன் பிடிபட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக ஏராளமான விஷயங்கள்வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலைமறைவாகியுள்ள பின் லேடனின்இருப்பிடம் குறித்தும் அவனுடைய பயங்கரவாத "நெட்வொர்க்" குறித்தும் தெரிய வரும்.
முகமது பிடிபட்டது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவனைப்பிடிக்க உதவியதற்காக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்புக்கும் அவர் நன்றிதெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் முகமதுவிடம் தங்கள் விசாரணையை நடத்திமுடித்து விட்டனர்.
இதையடுத்து அவன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று பிற்பகல் காபூலுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். அங்குள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில் வைத்து அவனை அமெரிக்கஅதிகாரிகள் விசாரிப்பார்கள்.
இதற்கிடையே முகமதுவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பாகிஸ்தான் ராணுவமேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கும்நெருங்கிய தொடர்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அடில் குதூஸ் என்ற அந்த மேஜர் முகமதுவுடன் பிடிபட்ட மற்றொரு அல்-கொய்தா தீவிரவாதியானஅகமது குதூஸ் என்பவனுடைய நெருங்கிய உறவினர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அகமது அல்லது முகமது ஆகியோருடன் அவர் எந்த அளவுக்குத் தொடர்பு வைத்துள்ளார் என்பதுகுறித்து பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் அவரிடம் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications