புகை..... பா.ம.கவுக்குப் பகை
சென்னை:
தமிழக அரசு தடை செய்த பின்னரும் கூட பொது இடங்களில் ஏராளமானவர்கள் புகைபிடிப்பதாகவும் அதைத் தடுக்க போலீசாரும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி பாட்டாளி மக்கள் கட்சியின மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.
பொது இடங்களில் புகை பிடிப்பதை கடந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்தது. ஆனால் "புகைமன்னர்கள்" இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆரம்பத்தில் பாக்கெட் செலவுக்காக போலீசாரும் புகைபிடிப்பவர்களை பிடித்து வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு விட்டு வந்தனர்.
இப்போதெல்லாம் போலீசாரும் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால்வழக்கம்போல் தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் என தடை செய்யப்பட்ட இடங்களில் எல்லாமேபுகை மூட்டம் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பதை எதிர்த்து பாமக சார்பில் இன்று சென்னையில்போராட்டம் நடத்தப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து உள்ள மெமோரியல் ஹால் அருகே பாமக மகளிர் அணியினர்இந்தப் போராட்டத்தை நடத்தினர். புகை பிடிப்பதை எதிர்த்து அவர்கள் பல்வேறு கோஷங்களையும்எழுப்பினார்கள்.
அதில் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.தெற்காசியாவிலேயே புகைபிடிக்கும் சதவீதம் வேகமாக அதிகரித்து வருவதும் தமிழகத்தில் தான்.
பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் தடை உத்தரவு இன்னும் அமலில்உள்ளது. ஆனால் இந்தத் தடை தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. இந்தத் தடையை முழுமையாகஅமலாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீடி, சிகரெட் விளம்பரங்களுக்கும் தடை செய்ய வேண்டும் என்றார் மணி.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications