ஸ்டாலின் சந்திப்பு: நெடுமாறனை குடைந்த போலீசார்
கடலூர்:
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியையும் அதேசிறையில் உள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனையும் திமுக இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து உங்களிடம் ஸ்டாலின் என்ன சொன்னார் என்று கேட்டு நெடுமாறனை சி.பி.சி.ஐ.டி.போலீடார் குடைந்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் வருகையையொட்டி விழுப்புரத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தட்டியைக் கிழித்தது தொடர்பாக பொன்முடி உள்பட மூன்று திமுகவினர் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே சிறையில் தான் புலிகளை ஆதரித்ததாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுநெடுமாறனும் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரைபா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சமீபத்திலசந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கடலூர் சிறைக்கு ஸ்டாலின் வந்தார். பொன்முடியையும் அவருடன்கைதாகி சிறையில் உள்ள ஏராளமான திமுக தொண்டர்களையும் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள்பேசினார். பின்னர் நெடுமாறனையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. குழு இரவோடு இரவாக கடலூர் விரைந்தது.சிறையில் வைத்தே இரவில் நெடுமாறனிடம் விசாரணை நடத்தினர். ஸ்டாலின் உங்களிடம் என்னபேசினார், கருணாநிதி ஏதும் கடிதம் கொடுத்தனுப்பினாரா என்று அவரைக் குடைந்து எடுத்தனர்.
ஆனால், பேச்சு விவரங்கள் எதையும் கூற நெடுமாறன் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக நெடுமாறனையும் பொன்முடியையும் சந்தித்துவிட்டு வந்த ஸ்டாலின் நிருபர்களிடம்கூறுகையில்,
பொய்யான வழக்கைப் பதிவு செய்து பொன்முடியை கைது செய்துள்ளனர் தமிழக போலீசார்.அதிமுக ஆட்சியில் அராஜகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜனநாயகக் கடமை எதையும்சரிவர ஆற்ற முடியவில்லை. கேள்வி கேட்டாலே பொய் வழக்கு போட்டு விடுகின்றனர்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்து, சர்வாதிகாரம்தான் வெற்றிபெற்றுள்ளது.
பொன்முடி கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அனைத்து எதிர்க் கட்சித்தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி பேசி அதிமுக ஆட்சிக்கு எதிராக தக்க நடவடிக்கைஎடுப்பார்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனையும் சந்தித்து அவருடைய உடல் நலம்விசாரித்தேன். அவர் கருணாநிதியின் நலம் குறித்து விசாரித்தார் என்றார் ஸ்டாலின்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications