இந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்
டெல்லி:
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா விரட்டியடித்த பின்னர்அந்நாட்டின் அதிபராக கர்சாய் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே கர்சாய் இந்தியாவுக்கு வந்தார்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை அளித்து வருகிறது.ஏற்கனவே பல லட்சம் டன் கோதுமைகளையும் அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது. பலவிமானங்களையும், நூற்றுக்கணக்கான பஸ்களையும் இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில் கர்சாய் தற்போது இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளார். டெல்லியில் ஜனாதிபதிமாளிகையில் கர்சாய்க்கு மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா உள்ளிட்ட தலைவர்கள் கர்சாயை வரவேற்றனர்.
இந்தியத் தலைவர்களுடன் நான்கு நாட்கள் மிக விரிவான பேச்சுக்களை கர்சாய் நடத்தவுள்ளார்.போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை முழு அளவில் மறுசீரமைக்க தேவையானஉதவிகளை வழங்குமாறு அவர் இந்தியத் தலைவர்களைக் கேட்டுக் கொள்வார்.
ஆப்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக இந்தியா மேலும் ஒரு ஏர்பஸ் விமானத்தை அன்பளிப்பாகஅளிக்கவுள்ளது. அந்த விமானத்தை நாளை முறைப்படி இந்தியாவிடமிருந்து கர்சாய் பெற்றக்கொள்வார்.
ஹிமாச்சல் பல்கலைக்கழகத்தில் தான் ஹமித் கர்சாய் உயர் கல்வி பயின்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஹிமாச்சலுக்கும் செல்ல இருக்கும் அவர் தனது பழைய பல்கலைக்கழக நண்பர்களைச்சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications