பழனி கல்லூரி செக்ஸ் விவகாரம்: மாணவிக்கு மிரட்டல்
திண்டுக்கல்:
பழனி மகளிர் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி நிர்வாகம் பாலியல் பலாத்காரத்தில்ஈடுபடுத்தியதாகப் புகார் கொடுத்த ஜெயப்பிரியா என்ற மாணவியையும் அவருடையபெற்றோரையும் மிரட்டிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பழனியாண்டவர் அரசினர் மகளிர் கல்லூரி ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற வேண்டும்என்பதற்காக தன் மாணவிகளையே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடச் செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்த அந்தஸ்தைக் கொடுப்பது தொடர்பாக ஆய்வு நடத்த வந்திருந்த "நாக்" எனப்படும் மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட குழுவில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கல்லூரியின் முதல்வரானசந்திரகாந்தாவே தன் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடச் செய்தார் என்றும்குற்றம் சாட்டப்பட்டது.
அந்தக் கல்லூரியைச் சேர்ந்த வேறு சில மாணவிகளே இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியதைத்தொடர்ந்து பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. மாணவிகளின் பெற்றோர் பொங்கி எழுந்தனர்.கல்லூரி மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்களான ஆறுமுகம்மற்றும் ராஜபாண்டி ஆகிய மாணவர்கள் ஜெயப்பிரியாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அங்கு ஜெயப்பிரியாவின் பெற்றோரான பாலமுருகன் மற்றும் பூங்கொடி ஆகியோரிடம், "உங்கள்மகளை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள், செய்யத்தயார். ஏதாவது பிரச்சனை செய்தால் குடும்பத்துடன் தொலைத்து விடுவோம்" என்றுமிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஜெயப்பிரியாவின் பெற்றோர் புகார்கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆறுமுகமும், ராஜபாண்டியும் கைது செய்யப்பட்டனர். கல்லூரியின்முதல்வர்தான் தங்களை அனுப்பி ஜெயப்பிரியாவை மிரட்டுமாறு கூறியதாக போலீசாரிடம் அந்தமாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த இரண்டுமாணவர்களும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
புகாருக்கு ஆதாரம் இல்லை: டி.ஆர்.ஓ.
இதற்கிடையே பழனி மகளிர் கல்லூரி மாணவிகள் பாலியல் பலாத்காரத்தில்ஈடுபடுத்தப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட வருவாய்அதிகாரி (டி.ஆர்.ஓ.) தன் விசாரணை அறிக்கையில் கூறியுள்ளார்.
பாலியல் புகார் தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணைக்குத் தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.கடந்த வாரம் விசாரணை நடத்திய டி.ஆர்.ஓ. சமீபத்தில் தன் அறிக்கையை மாவட்ட கலெக்டர்செந்தில்குமாரிடம் அளித்தார். இந்த அறிக்கை தொடர்பாக நிருபர்களிடம் செந்தில்குமார்கூறுகையில்,
இந்தப் புகாரை விசாரிப்பதற்காக டி.ஆர்.ஓ. ஜெயராமன் தலைமையில் 4 பெண் உறுப்பினர்கள்அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
பழனி மகளிர் கல்லூரியின் மாணவிகள், பேராசிரியைகள், முதல்வர் உள்பட பல்வேறுதரப்பினரிடமும் இந்தக் குழு விசாரணை நடத்தியது. கல்லூரிக்கும் அதன் விடுதிக்கும் சென்று கூடஇக்குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விசாரணைக் குழுவினர் தங்கள் அறிக்கையை என்னிடம் சமர்ப்பித்துள்ளனர்.அவ்வறிக்கையில் மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரப் புகாருக்கு எந்தவிதமான ஆதாரமும்இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் கல்லூரியில் சில நிர்வாக முறைகேடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகசிலர் ஆவணங்களுடன் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் விசாரணைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கல்லூரி விடுதிக்கு புதிதாக ஒரு பெண் வார்டனை நியமித்து அவர் அங்கேயே தங்கிமாணவிகளைக் கவனித்துக் கொள்ள விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் கல்லூரியை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன்படி வரும் 10ம் தேதி பழனி மகளிர் கல்லூரி மீண்டும் திறக்கப்படும்.
எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் சில கல்லூரி மாணவிகள் மீது பாலியல் புகாரைக் கூறியவர்கள்மீது நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் செந்தில்குமார்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications