5 மாவட்ட டூர் கிளம்பினார் ஜெ: அரியலூரில் கறுப்புக் கொடிகளுடன் வரவேற்பு
சென்னை:
5 மாவட்டங்களில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா இன்றுசென்னையில் இருந்து புறப்பட்டார். அடுத்த 5 நாட்களும் அவர் தொடர்ந்து இந்த மாவட்டங்களில்சுற்றுப் பயணம் செய்வார்.
முதல் கட்டமாக அவர் இன்று பெரம்பலூர் சென்றார். சென்னையிலிருந்து இன்று காலை தனிவிமானம் மூலம் திருச்சி சென்ற ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெரம்பலூர்சென்றார்.
அரியலூர் சாலையில் உள்ள துரைமங்கலம்-பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்றநிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பெரம்பலூர்-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்பட ரூ.101கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
மேலும் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கான அடிக்கல் உள்பட ரூ.85 கோடி மதிப்பிலானதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் ரூ.13 கோடி மதிப்பிலான நலத் திட்டஉதவிகளை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஜெயலலிதாவழங்கினார்.
இந்த விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:
இந்தியாவிலேயே அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அமைத்தது, வக்பு வாரியத்துக்கு பெண்ணை தலைவராகநியமித்தது, தலைமைச் செயலாளராக ஒரு பெண்ணை நியமித்தது எனது அரசு தான்.
அதே போல இந்த மாவட்டத்துக்கு இதுவரை முதலமைச்சர்கள் யாருமே வந்ததில்லை. நான் தான் இங்கு வந்த முதல்முதலமைச்சர். இதுவும் என் சாதனை தான். திருச்சி மாவட்டத்தைப் பிரித்து நான் இந்த மாவட்டத்தைஉருவாக்கினேன் என்ற ஒரே காரணத்துக்காக அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்த மாவட்டதைபுறக்கணித்தது.
அடுத்தவர்க்கு கொடுக்க நினைத்தால் தான் நமக்குக் கிடைக்கும். நான் இந்த மாவட்டத்துக்கு நிறைய வசதிகள்செய்து கொடுப்பேன் என்றார் ஜெயலலிதா.
சபாநாயகர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த அரசு விழாவில் அமைச்சர்கள் வளர்மதி,பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கறுப்புக் கொடி போராட்டம்:
இதற்கிடையே முதல்வர் வருகையையொட்டி அரியலூரில் பல இடங்களில் போராட்டங்கள்நடந்தன.
பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைத்ததை எதிர்த்து தொடர் போராட்டம்நடத்தி வரும் மாவட்ட மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவின் வருகைக்கு எதிராக அரியலூரில்கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
அடுத்தடுத்து அரசு விழாக்கள்:
இன்று பெரம்பலூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை காலை திண்டுக்கல்லில் நடக்கும் அரசுவிழாவில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மாலையே கரூர் மாவட்ட விழாவில்கலந்து கொண்டு நலத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
8ம் தேதி திருவாரூர் மாவட்டத்திலும், 9ம் தேதி தர்மபுரி மாவட்டத்திலும், 10ம் தேதி திருச்சிமாவட்டத்திலும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications