நெடுமாறனுக்கு தமிழில் குற்றப்பத்திரிக்கை தர பொடா நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்உள்பட 4 பேருக்கும் குற்றப்பத்திரிக்கையின் நகல்களைத் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கபொடா சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் கைதுசெய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தமிழர் தேசிய இயக்கத்தின் பிரமுகர்களான சுப.வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன் மற்றும் பாவாணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
நெடுமாறன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் மீதான வழக்குசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.
இந்நிலையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரும் நேற்று பொடா நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி ராஜேந்திரன் "இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5வது குற்றவாளி எங்கே?"என்று கேட்டார். அதற்கு பதிலளித்த போலீசார், அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்றும்அவரைப் பிடிக்க சிறிது கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தனர்.
பின்னர் சுப வீரபாண்டியனும் பாவாணனும் தங்களுக்கு குற்றப்பத்திரிக்கையின் நகலை தமிழில்கொடுக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான மனு ஒன்றும்அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையின் நகல் தமிழில் கொடுக்கப்பட்டால் படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்றுநெடுமாறனின் வழக்கறிஞரான சந்திரசேகரும் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் தமிழில் குற்றப்பத்திரிக்கையின் நகலைக் கொடுக்க நீதிபதி மறுத்து விட்டார். நீதிமன்றத்தில்அனைத்து வழக்குகளுமே ஆங்கிலத்தில்தான் நடைபெறுகிறது என்று கூறிய நீதிபதி ராஜேந்திரன்,குற்றப்பத்திரிக்கையில் சந்தேகம் இருந்தால் உங்கள் வழக்கறிஞரிடமே தமிழ்படுத்திக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து நெடுமாறன் உள்பட நான்கு பேருக்கும் வரும் 20ம் தேதி வரை சிறைக் காவலைநீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நெடுமாறன் நிருபர்களிடம் கூறுகையில்,
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜாமீனில் விடுதலையாக ஒரு ஆண்டு வரைசிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளதீர்ப்பு ஜனநாயக, மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடுபவர்களுக்குக் கிடைத்தவெற்றியாகும்.
திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் கடலூர் சிறையில் என்னைச் சந்தித்தார். ஆனால் இதில்அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையும் அந்நாட்டு மீனவர்களும் அடிக்கடி தாக்கிவருகின்றனர். இதுவரை 300 தமிழக மீனவர்கள் அவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்கிக் கொண்டிருக்கிறது என்றார் நெடுமாறன்.
பின்னர் அவர் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
-->












Click it and Unblock the Notifications