பவானி அணை: கோவையில் ராமதாஸ் போராட்டம்
கோயம்புத்தூர்:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டித்துகோயம்புத்தூரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து ஓடும் பவானி நதியின் குறுக்கே கேரள அரசு முக்காலி என்னும் இடத்தில்தடுப்பணை ஒன்றைக் கட்டி வருகிறது. இதை தமிழக அரசும் விவசாயிகளும் அனைத்துக் கட்சிகளும்கடுமையாக எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக விவசாயிகளையும் நிருபர்களையும்ரெளடிகளுடன் சேர்ந்து கொண்டு கேரளப் போலீசார் பயங்கரமாகத் தாக்கினர். கடந்த மாதம் நடந்தஇந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோயம்புத்தூரில் ராமதாஸ் தலைமையில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் சுமார் 150 பா.ம.கவினர் கலந்து கொண்டனர்.
அப்போது கேரள அரசைக் கண்டித்து பாமகவினர் கோஷங்களை எழுப்பினார்கள். தமிழகவிவசாயிகள் மற்றும் நிருபர்கள் மீது கேரள போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும்கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பவானி அணை விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லைஎன்று போராட்டத்தின்போது பேசிய ராமதாஸ் குறிப்பிட்டார்.
மேலும் இது அமைச்சர்களே பேசி முடிக்க வேண்டிய சாதாரண விவகாரம் அல்ல என்றும் முதல்வர்ஜெயலலிதாவே நேரடியாக திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் ஆண்டனியிடம் பேச்சு நடத்தவேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
வீராணம்: கடலூரில் 8ம் தேதி போராட்டம்:
இதற்கிடையே புதிய வீராணம் திட்டத்தைக் கண்டித்து கடலூரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில்பாமகவினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி விடுத்துள்ள அறிக்கையில், புதிய வீராணம்திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் கிடைக்கும் வாய்ப்பே இல்லை.
ஆனால் வீராணம் ஏரியை நம்பி விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள்தான்பாதிக்கப்படுவார்கள். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கடலூரில் டாக்டர் ராமதாஸ்தலைமையில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் மணி.
-->


Click it and Unblock the Notifications
