அதிமுகவினர் மீதான தாக்குதல்: வைகோவுக்கு காவல் நீட்டிப்பு
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறையில் அதிமுகவினர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பான வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நாகப்பட்டினம்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை சட்டசபைத் தேர்தலின் போது திமுக மற்றும்அதிமுகவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக அப்போது திமுகவில் இருந்த வைகோ மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கு தற்போது நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வைகோ தவிர திமுகமுன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடும்பையன்உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவர வைகோ மறுத்துவிட்டதால் அவரது சிறைக் காவல்நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராவதற்காக வைகோ இன்று காலை பலத்த பாதுகாப்புடன் வேலூர்சிறையிலிருந்து நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சிசுந்தரம் ஏப்ரல் 11ம் தேதி வரை வைகோவின் சிறைக் காவலைநீட்டித்து உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும் அதே தேதிக்கு ஒத்திவைத்தார்.
கைதான மதிமுக பிரமுகருக்கு மூல வியாதி:
இதற்கிடையே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளமதிமுக பிரமுகர் செவந்தியப்பன் மூல வியாதி காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
செவந்தியப்பன் மூல வியாதியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். சிறையிலேயே அவருக்குஇதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி அதிகமாகவே அவரை மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் சேர்க்க சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. செவந்தியப்பன் இருக்கும் மருத்துவமனை அறையைச் சுற்றிலும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications