துபாய்க்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி: விஞ்ஞானி கைது
டெல்லி:
துபாய்க்கு ரூ.64 லட்சம் ஹவாலா பணத்தைக் கொண்டு செல்ல முயன்ற மூத்த விஞ்ஞானி ஒருவர்டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மத்திய தடயவியல் ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணிபுரிபவர் சி.கே. ஜெயின். இவர்விமான நிலையத்தில் துபாய் செல்லும் விமானத்தில் ஏறி உட்கார்ந்திருந்தார்.
அவர் ஹவாலா கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே வருமான அதிகாரிகளுக்குத் தகவல்கிடைத்திருந்தது.
இதையடுத்து அந்த விமானத்துக்குள் நுழைந்து ஜெயினிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டபோதுஅவர் ரூ.64 லட்சம் ரொக்கப் பணத்தை வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயினிடம் துருவித் துருவி விசாரித்தபோதுதான் அவர் அந்நியச் செலாவணிமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்தப் பணத்தை குவைத்துக்குக் கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயினை போலீசார் கைது செய்தனர். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்உள்ள ஒரு அறிவியல் துறையின் மூத்த விஞ்ஞானி ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications