டெல்லியில் பாகிஸ்தான் உளவாளி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் வேலையில் ஈடுபட்டிருந்த 63 வயது முதியவரை டெல்லிபோலீசார் கைது செய்தனர்.

ஒம்கார்நாத் காலியா என்ற அந்த முதியவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அருகேசந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார்.

அவரை உடனடியாகக் கைது செய்த டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார், அவரிடமிருந்துஏராளமான பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அந்த ஆவணங்களை பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சிலஅதிகாரிகளிடம் தருவதற்காகவே காலியா அங்கு வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

புத்தக விற்பனையாளரான காலியா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் என்ற ஊரச்சேர்ந்தவர். அந்தப் போர்வையிலேயே பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் வேலையிலும் அவர்ஈடுபட்டுக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+