தமிழர்களுக்காக ஒன்று சேரும் தமிழக எம்.பிக்கள்: நாடாளுமன்றத்தில் ஆச்சர்யம்!
டெல்லி:
தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தமிழக எம்.பிக்களும்நாடாளுமன்றத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததைக் கண்டு மற்ற உறுப்பினர்கள் மிகவும்ஆச்சர்யம் அடைந்தனர்.
இந் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்காகவும் அனைத்து தமிழ் எம்.பிக்களின் குரலும்சேர்ந்து ஒலித்து நாடாளுமன்றத்தை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஊர்ப் பெயர்கள் தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்றுநேற்று முன்தினம் சில திமுக எம்.பிக்கள் மக்களவையில் வலியுறுத்தினர். இதை அதிமுகஉறுப்பினர்கள் உள்பட அனைத்துக் கட்சி தமிழக எம்.பிக்களும் வரவேற்றனர்.
இதை இந்தி பேசும் சில சமாஜ்வாடி உறுப்பினர்கள் எதிர்க்கவே உடனே அவர்களை அடிப்பதற்காகசில திமுக எம்.பிக்கள் பாய்ந்து சென்றனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. சுமார் 15நிமிடங்கள் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் மொழிக்காக கட்சிப் பாகுபாடு காட்டாமல் அனைத்து தமிழக எம்.பிக்களும் ஒற்றுமையுடன்குரல் எழுப்புகின்றார்களே என்று மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் மிகவும்ஆச்சர்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிஅவர்களைக் கடத்திக் கொண்டும் செல்கின்றனர்.
இந்தப் பிரச்சனையும் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இது தொடர்பாக அதிமுகஎம்.பிக்களின் தலைவரான பி.எச். பாண்டியன் பேசும்போது, தமிழக மீனவர்களை இலங்கைமீனவர்கள் அடித்து இழுத்துச் செல்வதாகவும், இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
பாண்டியனின் இந்தக் கோரிக்கையை திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழகஎம்.பிக்களும் வரவேற்றுப் பேசினர். தமிழக மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் திமுக எம்.பியான விடுதலை விரும்பி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களும்,மதிமுக எம்.பிக்களும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குச் சென்று அந்தத் துறை அமைச்சரானயஷ்வந்த் சின்ஹாவிடம் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரி மனுஒன்றையும் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சரை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஒற்றுமைக்கு பலனும் கிடைத்தது. இலங்கை அரசுடன் மத்திய அரசு விரைவாகத் தொடர்புகொண்டு, அந்நாட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான பணிகள்துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications