காதலர்களை குறிவைத்து "பைக்" திருடிய கல்லூரி மாணவர்கள்
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளைத் திருடி விற்று வந்த 2 கல்லூரிமாணவர்கள் உள்பட 5 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
மெரினா கடற்கரைக்கு காற்று வாங்க வருவோர் நிறுத்தி வைத்து விட்டுச் செல்லும் பைக்குகள் அடிக்கடி காணாமல்போய்க் கொண்டிருந்தன.
இது தொடர்பாக கடற்கரை காவல் நிலையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து பைக் திருடர்களைப்பொறிவைத்துப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கடற்கரை அருகே ஒரு பைக்கை போலீஸார் நிறுத்தி வைத்து விட்டு மறைந்து நின்றனர்.
அப்போது ஒரு இளைஞன் அங்கு வந்து அந்த பைக்கை மாற்றுச் சாவி போட்டு எடுத்துச் செல்ல முயன்றான்.உடனே அங்கு மறைந்து நின்ற போலீஸார் அவனைப் பாய்ந்து சென்று பிடித்தனர்.
அந்நபரிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் நஸீர் என்றும், ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவன்என்றும் தெரிய வந்தது.
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.5லட்சம் மதிப்புள்ள ஒன்பது பைக்குகளையும் போலீசார் கைப்பற்றினர்.
காதலர்கள் தங்களையும் மறந்து கடற்கரையில் இருக்கும்போது அவர்களுடைய பைக்குகளை "அபேஸ்" செய்துகொண்டு இந்தத் திருட்டுக் கும்பல் ஓடி விடும் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரில் இரண்டு பேர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications