ஊர் பணத்தை பாழ்படுத்தும் ஜெ: இளங்கோவன் தாக்கு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடருவதில் தீவிரமாகஇருப்பதாகவும், இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் சென்னைக்குவரவழைக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சாத்தான்குளத்தில் பதவி, அதிகாரம், பணத்தை வைத்து அதிமுகவை வெல்லச் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. இதுமக்களால் கிடைத்த வெற்றியே அல்ல. இதை நிச்சயம் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
ஜெயலலிதாவின் முறைகேடுகளை தேர்தல் கமிஷனே சுட்டிக் காட்டிவிட்டது. இதனால் நியாயம் எங்கள் பக்கம்தான் உள்ளது. அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் வென்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரஉள்ளோம்.
இது குறித்துப் பேச சாத்தான்குளம் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை சென்னைக்கு வரவழைத்துள்ளோம்.
அரசு விழாக்களில் கடைக்குட்டி, செல்லக் குட்டி, முயல் குட்டி என்று கதை சொல்லி வருவதை ஜெயலலிதா நிறுத்திக்கொண்டு உருப்படியான கடைமைகளில் கவனம் செலுத்த வேண்டும். அறிவித்த திட்டங்களையே இன்னும்எத்தனை முறை தான் ஹெலிகாப்டரில் பறந்து போய் மீண்டும், மீண்டும் அறிவிப்பாரோ தெரியவில்லை. ஊர்ப்பணத்தை பாழ்படுத்தும் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது என்றார் இளங்கோவன்.
புலிகள் மீது சோ.பா. புகார்:
இதற்கிடையே தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள் தான்தாக்கியதாகவும் கடத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார்.
காரைக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் கடத்தலில் புலிகளின் பின்னணி உள்ளது.அவர்களது ஆதரவு கொண்ட இலங்கை மீனவர்கள் தான் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்னர்.
இந்தப் பிரச்சனையை தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கிளப்புவார்கள். இதற்காக எங்கள்தலைவர் சோனியா காந்தியின் அனுமதியைக் கோர உள்ளேன். இதற்காக அவரைச் சந்தித்துப் பேச டெல்லிசெல்கிறேன் என்றார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications