கிரைம் பீட்: விடியவிடிய காத்திருந்து திருடர்களை பிடித்த மக்கள்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பாகனேரி என்ற கிராமத்தில் ஒரு தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்த 2திருடர்களை பொதுமக்கள் இரவுமுழுவதும் முற்றுகையிட்டு காலையில் பிடித்து போலீஸில்ஒப்படைத்தனர்.
ஊருக்குப் போனதால் பூட்டப்பட்டிருந்த தொழிலதிபரின் வீட்டின் பின் புறம் இரவு நேரத்தில் ஒருமோட்டார் சைக்கிள் நின்றிருந்தது. வண்டி புதிதாக இருந்ததால் அந்தப் பகுதியைச்சேர்ந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டை அவர்கள் நோட்டமிட்டபோது உள்ளே இரு திருடர்கள் இருப்பதுதெரியவந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீட்டைச் முற்றுகையிட்டனர்.
ஆனால், தங்களிடம் வெடிகுண்டு இருப்பதாக திருடர்கள் மிரட்டியதால் வெளியிலேயேகாத்திருந்தனர். விடிய விடிய இந்தக் காத்திருத்தல் தொடர்ந்தது. திருடர்கள் வெளியில் வரவேஇல்லை.
அதிகாலையில் திருடர்கள் வேறு வழியின்றி வெளியேறியபோது வீட்டைச் சுற்றிலும் கூடியிருந்தமக்கள் பாய்ந்து சென்று அவர்களைப் பிடித்தனர்.
மக்கள் கொடுத்த தர்ம அடியில் இரு திருடர்களுக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. பின்னர் இந்தஇரு திருடர்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
திருடர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் கூட சென்னையில் திருடப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
பஞ்சலோக சிலைகள் மீட்பு:
இந் நிலையில் ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2 பஞ்சலோக சிலைகளைதிருவொற்றியூர் போலீஸார் பறிமுதல் செய்து 2 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநில கோவிலில் இருந்து சிவன், பார்வதி பஞ்சலோக சிலைகளை திருடிக் கொண்டு இருவர்சென்னை வந்தனர். கோணிப்பையில் வைத்து சிலைகளை சுற்றி, அதை தலைமேல்வைத்துக்கொண்டு திருவொற்றியூர் வந்த அவர்கள் அடுத்து என்ன செய்யலாம் விழித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்தபோது இவர்களது திருட்டுவெளிப்பட்டது.
சிலைகள் பல லட்சம் மதிப்புள்ளவையாகும்.
கொத்தடிமை குடும்பங்கள் மீட்பு:
தாராபுரத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 2 குடும்பத்தினரை போலீஸார் மீட்டுள்ளனர்.
காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்தவர்முருகேசன். அவரது மனைவி சாரதா. இவர்களுக்குஇரண்டு குழந்தைகள் உள்ளனர். அதேபோல,முருகேசனின் சகோதரர்குமார் இவரது மனைவிமீனா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தாராபுரத்தில் கைத்தறி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை பார்த்துவந்தனர்.
இது குறித்து அறிந்த காரைக்குடி போலீஸார் தாராபுரம் சென்று இரு குடும்பத்தினரையும் மீட்டுவந்தனர்.
குடிசையில் தீ- சிறுவன், சிறுமி சாவு:
சென்னை அருகே குடிசையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 வயது சிறுவனும் 10 வயது சிறுமியும்உடல் கருகி பரிதாபமாக பலியாயினர்.
சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே உள்ளது ராஜகுப்பம். இப்பகுதியில் மின் கசிவுகாரணமாக ஒரு குடிசை வீடு தீப்பிடித்துக் கொண்டது. இதில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தசிறுவனும், சிறுமியும் உடல் கருகி இறந்தனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications