தமிழக அரசு சட்டத்துக்கு கலாம் ஒப்புதல்: இனி பொது இடங்களில் தம் அடித்தால் ரூ.500 அபராதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு புகை பிடித்தல் மற்றும் பொது இடங்களில் துப்புதல் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர்ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இனி பொது இடங்களில் இச் செயல்களைச் செய்தால் ரூ. 500அபராதம் விதிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

பொது இடங்களில் துப்புதல், பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களில்துப்புதல், பொது இடங்களில் புகைபிடித்தல் ஆகியவற்றிற்குத் தடை விதித்து தமிழக அரசுசட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த சட்ட மசோதா அனுப்பப்பட்டது. தற்போது இந்தமசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக அரசின்கெஸட்டிலும் (அரசிதழ்) இச் சட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இச் சட்டம்உடனடியாக அமலுக்கு வருகிறது.

பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாது என்ற அறிவிப்பு இனிமேல்அனைத்து பொது இடங்களில் வைக்கப்படும். அரசு பஸ்களில் எச்சில் துப்பினால் வழங்கப்படும்தண்டனை குறித்தும் அறிவிப்புகள் ஒட்டப்படும்.

பொது இடங்களில் புகைபிடித்து முதல் தடவை பிடிபட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.மறுபடியும் பிடிபட்டால் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகள் அருகே புகைபிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றால் ரூ.500அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இத் தவறைச் செய்தால் 3மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வரும் முன்னரே இச் சட்டத்தை காவல்துறை அமலாக்கஆரம்பித்துவிட்டது. ஆனால், தம் அடிப்பவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதில் தான் போலீசார்அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முறைப்படியான அபராதம் விதிப்பதில்லை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+