ஈராக்: பிளவுபட்டு நிற்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை

Subscribe to Oneindia Tamil

ஐ.நா. சபை:

இராக்கிடம் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் ஏதும் இல்லை என ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளர் ஹேன்ஸ்பிலிக்ஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவர் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அவரது அறிக்கையைபிரான்ஸ், ஜெர்மன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வரவேற்றதோடு ஈராக் மீது தாக்குதலே தேவையில்லை என்றுகூறின.

ஆனால், இந்த அறிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்கா தீவிரம்:

உலகமே பரபரப்புடன் எதிர்பார்த்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டம் ஜெர்மனியின் தலைமையில் நடந்தது.இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானும் பங்கேற்றார். முதலில் ஹேன்ஸ் பிலிக்ஸ் தனதுஅறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் பிற நாட்டு அமைச்சர்கள், தூதர்கள் பேசினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் பேசுகையில், ஈராக்கைத் தாக்க ஐ.நா. உடனே தீர்மானம்நிறைவேற்ற வேண்டும். இனியும் காலம் தாழ்த்த முடியாது என்றார்.

17ம் தேதி வரை இங்கிலாந்து கெடு:

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா பேசுகையில், பேரழிவு ஆயுதங்களையும் ஒழிக்க வரும்17ம் தேதி வரை ஈராக்குக்கு கெடு விதிக்கிறோம். அதற்குள் ஆயுதங்களை ஒழிக்காவிட்டால் அமெரிக்காவுடன்சேர்ந்து தாக்குவோம் என்றார்.

இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முழுப் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடானஅமெரிக்காவுக்கு இன்னொரு நிரந்தர உறுப்பினரான இங்கிலாந்து, தாற்காலிக உறுப்பு நாடுகளான பல்கேரியா,ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.

ஆனால், மேலும் 5 நாடுகளின் ஆதரவு கிடைத்தால் தான் ஈராக்கைத் தாக்கும் தீர்மானத்தை அமெரிக்காவால்நிறைவேற்ற முடியும். இதனால் பாகிஸ்தான், கினியா, அங்கோலா போன்ற நாடுகளை அமெரிக்கா தனக்குஆதரவாகத் திருப்ப கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

9 பேரின் ஆதரவை அமெரிக்கா திரட்டினாலும் பிரான்ஸ் தனது வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தைரத்து செய்துவிட்டால் அமெரிக்கத் திட்டம் பலிக்காது.

இதனால் தான் தீர்மானம் நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் ஈராக்கைத் தாக்குவோம் என அமெரிக்காகூறுகிறது.

காஷ்மீரை கிளப்பிய பாகிஸ்தான்:

பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் பேசுகையில்,

ஈராக் விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரட்டை வேடம் போடுகிறது. ஆயுதங்களை ஒழிக்க வேண்டும்என்ற ஐ.நா. தீர்மானத்தை ஈராக் நிறைவேற்ற மறுப்பதாகக் கூறி அந் நாட்டைத் தாக்கத் திட்டமிடுகிறோம். அதேநேரத்தில் காஷ்மீர் விஷயத்தில் ஐ.நா. தீர்மானத்தை மதிக்காத இந்தியா மீது எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

ஈராக்குக்கு கெடு விதிப்பதை பாகிஸ்தான் ஏற்காது. போரினால் ஈராக் மக்கள் தான் பாதிக்கப்படுவர். எனவே,அமைதி வழியில் தான் ஈராக்கிடம் உள்ள ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்றார்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தைக் கிளப்பிய பாகிஸ்தான் தூதரின் பேச்சை பிற நாடுகள்ரசிக்கவில்லை.

அமைதித் தீர்வு சாத்தியம்: ஜெர்மன்

ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசிக்கா பிஸ்ஸர் பேசுகையில், ஈராக்தைத் தாக்காமல் அமைதியாக,பேச்சு நடத்தியே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். ஈராக்கைத் தாக்க இன்னொரு தீர்மானம் தேவையே இல்லை.அதை எந்த நாடு கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்றார்.

அமெரிக்காவுக்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்பு:

ஈராக்கைத் தாக்குவதன் மூலம் தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாக அமெரிக்கா கூறுவது சுத்த ஜோக் என பிரான்ஸ்கூறியுள்ளது.

பிரஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் டி வில்லிபின் பேசுகையில், ஈராக்குக்கு கெடு விதிப்பதையும்ஏற்க மாட்டோம். இது தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்ப்போம். வீடோ அதிகாரத்தைப்பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் அதிபர்கள் ஐ.நாவில் ஆஜராகவேண்டும் என்றார். அவரது கருத்தை ரஷ்ய, சீன அமைச்சர்களும் ஆதரித்துப் பேசினர்.

ஈராக் தூதர் வெளியேற்றம்:

இதற்கிடையே, அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள ஆஸ்திரேலியா தனது நாட்டில் உள்ள ஈராக் தூதரைவெளியேற்றியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+