அயோத்தி: கோவிலை தோண்டும் பணி நாளை ஆரம்பம்
அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக 16 நிபுணர்கள் அடங்கியதொல்பொருள் ஆய்வுக் குழுவினர் நாளை தங்கள் சோதனையைத் தொடங்குகின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதா என்பதைக் கண்டறிய அந்தஇடத்தைத் தோண்டிப் பார்த்து அகழ்வாராய்ச்சி நடத்துமாறு மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த5ம் தேதி உத்தரவிட்டது.
மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு, ஒருமாதத்திற்குள் ஆய்வுகளை முடித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஆய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து வரும் 24ம் தேதி இடைக்கால அறிக்கையைத்தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தொல்பொருள் ஆய்வுத் துறையைச் சேர்ந்த டாக்டர் பி.ஆர். மணி தலைமையிலான 12 நிபுணர்கள்அயோத்திக்கு வந்து சேர்ந்துள்ளனர். நாளை அவர்கள் தங்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்கவுள்ளனர்.மேலும் 4 நிபுணர்கள் பின்னர் வந்து சேர்ந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் வருகையைத் தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்புப் பணிகள்பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிபுணர்களுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் இருந்தது தொடர்பாக வரலாற்றுப் பேராசிரியர்களே பல்வேறு கருத்துக்களைத்தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் இதே இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணியை மேற்கொண்ட பேராசிரியர் லால்,இங்கு ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார்.
"ராமாயண அகழ்வாராய்ச்சி" என்ற பெயரில் அப்போது சுமார் 12 ஆண்டுகள் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 14இடங்கள் இதற்காகத் தோண்டப்பட்டன.
அப்போது கிடைத்த சில தூண்களின் அடிப்பாகமும், பழங்கால மட்பாண்டங்களும், கல்வெட்டுக்களும்தான்அங்கு ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் என்று பேராசிரியர் லால் கூறியுள்ளார்.
ஆனால் சில இடது சாரி பேராசிரியர்கள் இதை மறுத்தனர். ""1975-76க்கு முன் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில்தூண்களின் அடிப்பாகம் கிடைத்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் கூறப்பட்டிருக்கவில்லை. இந்த ஆதாரத்தைலால் அவராகவே சேர்த்துள்ளார்"" என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் நாளை மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்க உள்ளன. இந்த ஆராய்ச்சி நிபுணர்கள் என்னமுடிவுகளைக் கூறப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு மாதம் பொறுத்திருக்க வேண்டும்.
இதற்கிடையே இந்த ஆராய்ச்சியை ஒரு மாதத்திற்குள் முடித்து விட முடியாது என்று சில அகழ்வாராய்ச்சிநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சி நடைபெறவுள்ள இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சொந்தம் கொண்டாடும் ஜைன மதம்:
இதற்கிடையே அயோத்தியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் தோண்டிப் பார்க்கும்போது அங்கு ஜைன மதக்கோவில்தான் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
6வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜைன கோவிலின் மேல்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்தது. அந்த மசூதிதான்கடந்த 1992ல் இடித்துத் தள்ளப்பட்டது என்று ஜைன சமதா வாஹினி என்ற இயக்கம் தன் அறிக்கையில்கூறியுள்ளது.
அங்கு ஜைன கோவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடம் முழுவதையும் தங்களிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் ஜைன மதத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications