பொடா: 12ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
பொடா சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியுள்ளது திமுக.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன்உள்ளிட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதிஉள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
வைகோ கைதைக் கண்டித்து சில மாதங்களுக்கு முன் மதிமுகவினர் நடத்திய ஒரு கோடி கையெழுத்துஇயக்கத்தில் கருணாநிதிதான் முதலில் கையெழுத்துப் போட்டார்.
இந்தக் கையெழுத்து இயக்கத்தின் படிவங்களை ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிடமும், பிரதமர்வாஜ்பாயிடமும் மதிமுக தலைவர்கள் சமர்ப்பித்தனர். வைகோ கைது தொடர்பாக உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே பொடா சட்டத்தில் உள்ள சில விதிகளை நீக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வைகோ. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பொடா சட்டம் குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன்விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று சமீபத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.
அதன்படி இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு பொடா சட்டம் தாக்கல் செய்யப்படும்போதே பல கட்சிகளும்அதைக் கடுமையாக எதிர்த்தனர். சில மாநில அரசுகள் பொடா சட்டத்தைத் தவறாகப்பயன்படுத்தலாம் என்றும் பல எம்.பிக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதையும் மீறி பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது.
அரசியல் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுபொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.
பொடா சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைசென்னையில் திமுக கூட்டியுள்ளது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதைக்கண்டித்து இந்தக் கூட்டத்தின்போது பல்வேறு போராட்டங்களுக்கான அறிவிப்புகள்வெளியிடப்படும் என்று தெரிகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications