"மஞ்சள் காமாலை" பிடியில் மதுரை குழந்தைகள்
மதுரை:
மதுரை மாநகரில் குழந்தைகளிடையே மஞ்சள் காமாலை நோய் வேகமாகப் பரவி வருகிறது.
கோடை காலம் துவங்கி விட்டாலே குழந்தைகளுக்கு மிகுந்த கஷ்டமாகி விடும். கோடை காலத்தில்பல்வேறு நோய்கள் வந்து, குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் சிரமப்படுத்தும்.
அந்த வகையில் தற்போது மதுரையில் கடும் வெப்பம் நிலவுவதால், மஞ்சள் காமாலை நோய்வேகமாகப் பரவி வருகிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு தலைவரானடாக்டர் ராஜகோபால் கூறுகையில்,
கடந்த ஒரு வாரத்தில் குழந்தைகள் நலப் பிரிவுக்கு வந்திருந்த குழந்தைகளில் ஒரு சதவீதம் பேருக்குமஞ்சள் காமாலை அறிகுறிகள் இருந்தன. சுமார் 15 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோயின்தாக்கம் இருந்தது.
இது வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கை ஆகும். நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக்கொண்டுவரப்பட்ட 840 குழந்தைகளில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை இருந்தது தெரிய வந்தது.
அசுத்தமான தண்ணீர், அதிகரித்த வெப்பம், சூடு போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.ஐஸ்கிரீம் சாப்பிடுவது, பாதுகாப்பில்லாத குடிநீரைக் குடிப்பது, சாலைகளில் விற்கும்திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிடுவது ஆகியவற்றைக் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
அதற்குப் பதிலாக காய்ச்சி வடிக்கப்பட்ட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். நிறைய பழங்கள்சாப்பிட வேண்டும் என்றார் டாக்டர் ராஜகோபால்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications