சித்திரவதை: மலேசிய தூதரிடம் இந்தியா கண்டனம்
டெல்லி:
மலேசியாவில் சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்பட 270 இந்தியர்கள் அந்நாட்டு போலீசாரால்கொடுமைப்படுத்தப்பட்டதை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. இதையடுத்து இச் சம்பவம்குறித்து விசாரணைக்கு நடத்த மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு மலேசிய தூதரை அழைத்து மத்திய அரசு அதிகாரிகள் அவரிடம் தங்களதுகண்டனத்தைத் தெரிவித்தனர். இதனால் இரு நாட்டு உறவுகளும் சீர்குலையும் எனவும்எச்சரித்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்தியர்களுக்கு கொடுமைகள் இழைத்ததற்காக மலேசிய பிரதமர் இந்தியாசாப்ட்வேர் என்ஜினியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந் நாட்டு எதிர்க் கட்சித் தலைவர்லிம் கிட் சியாங் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள பிரீக்பீல்ட்ஸ் பகுதியில் வசித்து வரும் 270 இந்தியர்களின் வீடுகளிலும்அத்துமீறி நுழைந்த மலேசியப் போலீசார் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும், விசாபக்கங்களையும் கடுமையாகச் சேதப்படுத்தினர்.
மேலும் சுமார் 164 பேரைக் கைது செய்து போலீஸ் காவலிலும் வைத்தனர். இவர்களில்ஏராளமானவர்கள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். முறையான பாஸ்போர்ட்டுகளும், விசாக்களும்வைத்திருப்பவர்கள். தகவல் அறிந்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் விரைந்துசென்று அவர்களை மீட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் 12 இந்தியர்கள் தொடர்ந்து போலீஸ்காவலில் உள்ளனர்.
போலீஸ் நிலையத்தில் இந்தியர்களை மண்டியிட வைத்தும், அடித்தும், உதைத்தும் போலீசார்கேவலப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள மலேசியத் தூதர்ஜூசிகியோவை நேரில் அழைத்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் அபயங்கர் கடும்கண்டனத்தைத் தெரிவித்தார்.
இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும் வகையில் மலேசியப் போலீசார் நடந்து கொண்டுள்ளனர்என்று குறிப்பிட்ட அபயங்கர், இது தொடர்பாக மலேசிய அரசு அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்துஅடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மலேசிய எதிர்க் கட்சி கோரிக்கை:
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் பொறுப்பு வகிக்கும் அப்துல்லா அகமத் படவாய் மன்னிப்பு கேட்கவேண்டும் என அந் நாட்டு எதிர்க் கட்சித் தலைவரும் மனித உரிமை ஆர்வலருமான லிம் கிட் சியாங் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அப்துல்லா அகமத் முதலில் மலேசிய நாடாளுமன்றத்தில் இச் சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இந்திய என்ஜினியர்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும். சாப்ட்வேர் தொழிலை வளர்க்க விரும்புவதாகக் கூறும்மலேசிய அரசின் இந்தச் செயல் இந் நாட்டில் அந்தத் துறையையே அழித்துவிடும்.
மேலும் இந்தியாவுடனான உறவையும் இச் சம்பவம் சீர்குலைத்துள்ளது. முறைகேடாக நாட்டில்குடியேறுபவர்களைப் பிடிக்கவும் தண்டிக்கவும் ஒரு வரை முறை வேண்டும். முதலில் அதற்கான விதிகளை அரசுதிருத்த வேண்டும் என்றார்.
விசாரணைக்கு உத்தரவு:
இந்தியாவிடம் இருந்து இச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் வந்துள்ளதால் இது குறித்து விரிவான விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக மலேசியப் பிரதமர் பொறுப்பு வகிக்கும் அப்துல்லா அகமத் படவாய் கூறியுள்ளார். இச்சம்பத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவிடம் உறுதியளித்துள்ளதாகவும்அவர் கூறியுள்ளார்.
"நாஸ்காம்" கண்டனம்:
இதற்கிடையே மலேசியாவில் சாப்ட்வேர் நிபுணர்கள் தாக்கப்பட்டது குறித்து இந்திய சாப்ட்வேர்நிறுவனங்களின் கூட்டமைப்பான "நாஸ்காம்" கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் நிபுணர்கள் மீது மலேசியப் போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பதைக் கடுமையாகக்கண்டிக்கிறோம் என்று கூறியுள்ள நாஸ்காம், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளைஎடுத்து வருவதாகவும் அங்குள்ள சாப்ட்வேர் நிபுணர்கள் தொடர்ந்து அங்கேயே பயமின்றிஇருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு கொடுமை நேர்ந்தால் மலேசியாவுக்கான இந்தியத் தூதரை திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications