திமுக கூட்டத்தை புறக்கணிக்கும் விடுதலை சிறுத்தைகள்
பாண்டிச்சேரி:
பொடா சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
நாங்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினோம். அப்போது திமுகவும், மதிமுக, பாட்டாளிமக்கள் கட்சி ஆகியவை அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கூட தெரிவிக்கவில்லை. மேலும் இந்தக் கட்சிகளின்ஆதரவுடன் ஆட்சியில் உள்ள மத்திய அரசு தான் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது.
அப்போது கூட இந்த இரு கட்சியினரும் இச் சட்டத்தை எதிர்க்கவில்லை. முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இருந்து திமுகவும் மதிமுகவும் வெளியேறட்டும். அதன் பின்னர் பொடா சட்டத்துக்கு எதிராக போராட்டம்நடத்தலாம்.
அதை விட்டுவிட்டு ஆட்சியிலும் இருந்து கொண்டு பொடா சட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளைக் கூட்டிஎன்ன பேசப் போகிறார்கள் திமுகவினர்?
அதே நேரத்தில் சென்னையில் திமுக கூட்டியுள்ள பொடா எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. அரசைக்கண்டித்து தீர்மானம் போட்டால் அதை வரவேற்போம் என்றார் திருமாவளவன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications