பேக் பெஞ்ச் திமுகவினரால் சட்டசபையில் தொல்லை: காளிமுத்து
சென்னை:
சட்டசபையில் ஒரு பிரிவு திமுக எம்.எல்.ஏக்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுவதாகவும் அவர்களை பிறதிமுகவினர் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பரிதிஇளம்வழுதியை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும்நீக்கி வைக்கும் தீர்மானத்தை சட்டமன்றம் தான் நிறைவேற்றியது. அதை நான் ரத்து செய்ய முடியாது.
இருப்பினும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் அவரை மீண்டும் அவையில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்திருப்பதால் அவையில் அது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.
திமுக எம்.எல்.ஏக்களில் பின்வரிசை உறுப்பினர்களான பொன்முடி, பரிதி ஆகியோர் கட்டுப்பாடின்றிசெயல்படுகிறார்கள். அவர்களை முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மூத்த உறுப்பினர்கள் (அன்பழகன்,துரைமுருகன், ஆற்காடு வீராசாமி) கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்த பின் வரிசை திமுகவினர் சபையில் எந்த உறுப்படியான காரியத்தையும் செய்வதில்லை. அவைக் குறிப்பில்நீக்கப்பட்ட பகுதிகளை சில எம்.எல்.ஏக்கள் வெளியில் சென்று பேட்டியாகத் தருகின்றனர். அதை சில டிவிக்களும்ஒளிபரப்புகின்றன. இந்தப் பழக்கத்தை உறுப்பினர்களும் டிவிக்களும் கைவிட வேண்டும். இதை ஒருவேண்டுகோளாகச் சொல்கிறேன்.
இல்லாவிட்டால் அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்றார் காளிமுத்து.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications