வைகோ, நெடுமாறனை விடுவிக்க கோரி 23ம் தேதி உண்ணாவிரதம்: அனைத்துக் கட்சிகள் முடிவு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனையும் உடனே விடுவிக்கக் கோரி வரும்23ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப போராட்டம் நடத்த திமுக தலைமையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இருவரையும் விடுதலை செய்ய மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடக்குமோ நடக்காதோ என்ற பெரும் சந்தேகத்துக்கு இடையே இக் கூட்டம் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிகள் இக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டன.
பொடா சட்டத்தை எதிர்த்து தான் நடத்திய பல போராட்டங்களை திமுகவும் மதிமுகவும் ஆதரிக்கவில்லை எனக் கூறி இக் கூட்டத்தில்பங்கேற்க மாட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்தார்.
நெடுமாறன் கைது விவகாரம் குறித்து விவாதிக்க இருப்பதால் இதில் கொள்கைரீதியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாககாங்கிரஸ் கட்சியும் கூறிவிட்டது. பொடா சட்டத்தை தீவிரமாக எதிர்க்கிறோம் என்றாலும் புலிகளை ஆதரிப்பவர்களின் விடுதலை குறித்துஆலோசிக்கும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி பதில் அனுப்பிவிட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என கருணாநிதிக்கு பதில் கடிதம் அனுப்பியது. அக் கட்சியின்மாநிலச் செயலாளர் வரதராஜன் அனுப்பிய கடிதத்தில், இந்தச் சட்டத்தை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறோம். ஆனால், இதைஆதரித்து வாக்களித்தவர்கள் திமுகவும் மதிமுகவும் தான். இப்போதும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கொண்டு அந்தச் சட்டத்துக்கு எதிராகதிமுக பேசி வருவது முரண்பாடானது என குறிப்பிட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுவும் கூட்டத்தைப் புறக்கணிப்பார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. இதனால் இக் கூட்டம் நடக்குமா என்பதே சந்தேகத்திற்கிடமானது.
ஆனாலும் கூட்டத்தை திட்டமிட்டபடி ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கருணாநிதி கூட்டினார். நல்லகண்ணு இக் கூட்டத்தில் பங்கேற்றார்.
கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் மதிமுக சார்பில் அவைத் தலைவர் எல்.கணேசன், பா.ம.க. சார்பில் அதன் நிறுவனர்ராமதாஸ், தலைவர ஜி.கே. மணி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் காதர்,ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏக்களான ரங்கநாதன், வள்ளல் பெருமான், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் சேதுராமன், எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம், தமிழக தேசிய லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அன்பழகன், துரை முருகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். இக் கூட்டத்துக்குபா.ஜ.கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,
பொடா சட்டம் கொண்டு வரப்பட்டபோதே அது தவறாகப் பயன்படுத்தப்படலாம், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சியில் உள்ளமாநிலங்களில் இச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படும் என்று திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை பா.ஜ.கவிடம் தெரிவித்தோம்.
ஆனால் அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய துணைப் பிரதமர் அத்வானி, இச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்என்று உறுதிமொழி தந்தார். அந்த உத்தரவாதத்தை அத்வானி காப்பாற்றவில்லை.
வைகோவும் பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டது நியாயமற்றது. பயங்கரவாதிகளை ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தைதவறாகப் பயன்படுத்தி அரசியல்ரீதியில் தனது எதிரிகளை அடக்க ஜெயலலிதா முயல்கிறார். இந்த இருவரையும் உடனே விடுவிக்க மத்தியஅரசும், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பிற கட்சிகளும் பேசினர். இதையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை விடுவிக்கக் கோரி வரும் 23ம் தேதிஞாயிற்றுக்கிழாமை மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என இக் கூட்டததில் முடிவு செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானம் பிரதமர் வாஜ்பாய்க்கும் அத்வானிக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை விடுவிக்கக் கோரி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் பிரம்மாண்டமான அளவில்நடத்தப்படும். இதில் பொது மக்களும் பங்கேற்பர். இக் கூட்டத்தில் சில கடசிகள் பங்கேற்காமல் போயிருக்கலாம். ஆனால், பொடாவைஎதிர்ப்பதில் அவர்களும் தீவிரமாகவே உள்ளனர். திமுக- மதிமுக இடையே நல்லுறவு நிலவுகிறது. இது திராவிட உணர்வால் வந்த உறவு.
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இது சரியா, தவறா என்ற வாதத்துக்கு நான்போக விரும்பவில்லை. இந்த தோண்டு பணி தொடங்கிள்ளதால் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமத்திய அரசுக்கு உண்டு.
இந்த நேரத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையிலோ, மீண்டும் ரத்தக் களறி ஏற்படும் வகையிலோ, யாருக்கும் ஆதரவாகவோ, யாருக்கும்எதிராகவோ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றார் கருணாநிதி.
இந் நிலையில அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குள்ளான நிலத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை சட்டத்தை நிறைவேற்றி மீண்டும்வி.எச்.பியிடம் கொடுக்க மாட்டோம் என மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமி மக்களைவையில் தெரிவித்தார்.
இது போன்ற ஒரு திட்டம் குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக செய்திகள் வந்தன. இதையடுத்துத் தான் கருணாநிதி இதற்கு எதிரானகருத்து தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications