கப்பல் மூழ்கடிப்பில் 11 புலிகள் பலி: பேச்சு தொடரும்
கொழும்பு:
தங்களது படகை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கைக் கடற்படை சுட்டு மூழ்கடித்ததாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இத் தாக்குதலில் 11 புலிகள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள புலிகள், தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதாகவும்அறிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை ஆயுதங்களுடன் வந்த புலிகள் கப்பலை யாழ்பாணம் அருகே இலங்கை கடற்படை சுற்றி வளைத்ததாகவும், புலிகள்தங்களைத் தாக்கியதால் திருப்பிச் சுட்டதாகவும் இதில் படகு கடலில் மூழ்கியதாகவும் இலங்கை அரசு கூறியது.
ஆனால், அந்தப் படகில் உணவுப் பொருள்களைத் தான் கொண்டு வந்தததாகவும், சர்வதேச கடல் எல்லையில் வைத்து படகை வழமறித்துவேண்டுமென்றே சுட்டு அதை கடற்படை நீரில் மூழ்கடித்ததாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
இரு தரப்பினரும் எத்தனை பேர் இறந்தனர் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஆனால், 11 புலிகள் அந்தப் படகில் இருந்தது தெரியவந்துள்ளது.அத் தாக்குதலில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதற்கு புலிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அடுத்து ஜப்பானில் நடக்கவுள்ள 6வதுசுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
ஆனால், இந்த கொடுமைக்குப் பின்னரும் கூட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதில் இருந்து நாங்கள் விலக மாட்டோம் எனபுலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கூறினார்.
ஜப்பானின் ஹகோன் நகரில் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை இந்த பேசசுவார்த்தைகள் நடக்கின்றன. இது குறித்து ஆண்டன்பாலசிங்கம் கூறியிருப்பதாவது: இந்தத் தாக்குதலால் புலிகள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். அதை அடக்கிக் கொண்டுதொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உள்ளோம்.
பேச்சுவார்த்தைகளை விரும்பாத சில சக்திகள் தான் இத் தாக்குதலை நடத்தியுள்ளன. ஆனால், நாங்கள் அமைதியை விரும்புகிறோம்என்பதை சிங்கள மக்களுக்கும் உலகத்துக்கும் தெரியப்படுத்தவே இவ்வளவு நடந்த பின்னரும் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்கிறோம்.
இலங்கையில் ஆட்சி மாறினாலும் பேச்சுவார்த்தைக்கு புலிகள் தயார். ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனா, சந்திரிகாவின் மக்கள் விடுதலைமுன்னணி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவது கஷ்டம். இதை சிங்களர்கள் உணர வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications