ஈராக் விவகாரம்: பிரிட்டன் விலகல்-சிக்கலில் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஈராக் மீதான போருக்கு ஆதரவு தெரிவித்தால் தனது ஆட்சியே கவிழந்துவிடும் நிலை உருவாகியுள்ளதால், இந்த போரில் இருந்து விலகிக்கொள்ள பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் புஷ்சின போர் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் தங்கள்பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஈராக் விவகாரத்தில் உலகமே அமெரிக்காவை எதிர்த்தாலும் அதை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்.இதனால் பிரிட்டனில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் தெருக்களில் திரண்டு போருக்கு எதிராகபோராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு தொடர்ந்து அமெரிக்காவை ஆதரித்தார். இந் நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி.ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு அமைச்சரும் ராஜினாமா மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கெல்லாம் உச்சாணியாகபிளேரின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 200 எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் தனது நிலையில் இருந்து பிளேர் பின் வாங்கியுள்ளார்.

நேற்று பென்டகனில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இதனைத் தெரிவித்தார். ஈராக்மீதான தாக்குதலில் பிரிட்டன் படைகள் ஈடுபடாது என அவர் கூறினார். பிரிட்டன் படைகள் இல்லாவிட்டாலும் அமெரிக்காவே தனியாகஈராக்கைத் தாக்கும் என்றார். அதே நேரத்தில் ஈராக்கிடம் உள்ள ஆயுதங்களை ஒழிப்பதில் எங்களுக்கு பிரிட்டன் தார்மீக ஆதரவைத் தரும்என்றார்.

இதனால் படைகளை வளைகுடாவுக்கு அனுப்பினாலும் கூட தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்குமா என்பது சந்தேகமே.

அமெரிக்க அதிகாரிகள் ராஜினாமா:

இதற்கிடையே அமெரிக்க அதிபரின் போர் முயற்சிகளுக்கு அவரது அரசாங்கத்திலேயே முதல்முறையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜார்ஜ்புஷ்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரு மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஈராக்கைத் தாக்கும் புஷ்ஷை ஆதரிக்க முடியாது என்று கூறி கிரீஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் ஜான் பிராடி கெய்ஸ்லிங் தனதுராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதே போல அமெரிக்க வெளியுறவுத்துறையின் திட்டமிடல் பிரிவின் மூத்த அதிகாரியான ஜான் பிரெளனும் தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார். மனசாட்சியுள்ள யாரும் இந்த போரை ஆதரிக்க முடியாது என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மற்றநாடுகளை மதிக்காமல், ஜனநாயகத்தையே குழி தோணடிப் புதைக்கும் செயலை ஒரு அமெரிக்க அதிபரே செய்வது கேவலமான செயல்என்று அவர் கூறியுள்ளார்.

போரை தவிர்க்க இந்தியா வலியுறுத்தல்:

இந் நிலையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பேசிய இந்தியத் தூதர விஜய் நம்பியார், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருந்தால் அதைபேசித் தான் அழிக்க வேண்டும். அதற்காக அந் நாட்டைத் தாக்க வேண்டிய அவசியமில்லை.

போர் என்பது கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல ஐ.நா. சபை தான் இதில் முடிவெடுக்க வேண்டும்.தனிப்பட்ட நாடுகள் அல்ல என்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பிரதமர் வாஜ்பாயும், ஐ.நா. சபையை மீறி தனிப்பட்ட முறையில் ஈராக்கை அமெரிக்காதாக்குவதை ஏற்க இயலாது என்றார்.

விட்டுக் கொடுக்காத பிரான்ஸ்:

இதற்கிடையே ஈராக் விஷயத்தில் பிரான்ஸ் விட்டே கொடுக்காது என அந் நாடு மீண்டும் கூறியுள்ளது. ஈராக் மீதான அமெரிக்கத்தாக்குதலை தடுத்து நிறுத்தி வரும் பிரான்ஸ் அதிபர் ஜேக்குயஸ் சிராக்குக்கு அந் நாட்டு பத்திரிக்கைகள் பாராட்டு மழை பொழிந்துள்ளன.

இதையடுத்து தனது அமெரிக்க எதிர்ப்பை அவர் கடுமையாக்கிக் கொண்டுள்ளார். ஈராக் தொடர்பாக யாருடனும் எப்போதும் பேசத் தயார்.ஆனால், தாக்குதலை மட்டும் ஏற்க மாட்டோம் என சிராக்கின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஈராக் கோரிக்கை:

பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி தங்களைத் தாக்க அமெரிக்கா முயல்வதாகவும் அதை ஐ.நா. சபை தடுக்க வேண்டும் என்றும் ஈராக்கோரியுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய ஈராக் தூதர் முகம்மத் அல் தெளரி கூறுகையில், எங்கள் நாட்டு எண்ணெய்க்காக எங்கள்மக்களை கொன்று குவிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் முயல்கின்றன என்றார்.

மேலும் அமெரிக்கா சொல்வது போல எங்களிடம் ஆளில்லாமல் பறக்கும் விமானமோ, ரசாயன ஆயுதங்களோ இல்லை என்றும் ஈராக்கூறியுள்ளது.

ஐ.நா. விளக்கம்:

அல்-சமத் ஏவுகணைகளைத் தயாரிப்பதை ஈராக் நிறுத்திவிட்டதாக ஐ.நா. ஆயுதக் கண்காணிப்பாளர ஹேன்ஸ் பிலிக்ஸின் செய்தித்தொடர்பாளர் ஹிரோ உகேய் கூறியுள்ளார்.

கடந்த 10 நாட்களில் 55 அல் மசத் ஏவுகளைகளை ஈராக் அழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புடினுடன் பிளேர் பேச்சு:

இந் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிர் புடினுடன் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் தொலைபேசியில் பேசினார். அப்போது, ஆயுதக்கண்காணிப்பாளர்களை அவர்களது கடமையைச் செய்ய விடுமாறு புடின் கோரிக்கை விடுத்தார்.

அவர்களுக்கு கெடு விதிப்பது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என பிளேரிடம் புடின் கேட்டுக் கொண்டார். ஈராக்கைத் தாக்கும்இரண்டாவது தீர்மானத்தை வீடோ அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்ய வேண்டாம் என பிளேர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதைஏற்க புடின் மறுத்துவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+