வேறு மசூதிகளையும் தோண்ட சொல்லுவோம்: விஎச்பி
அயோத்தி:
அயோத்தியைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பிற வழிபாட்டுத் தலங்களையும் தோண்டிப் பார்க்க வேண்டும்என கோரிக்கை விடுப்போம் என விஸ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அடியில்கோவில் இருந்ததா என்பதை ஆய்வு செய்ய தோண்டிப் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு தோண்ட அனுமதித்தால் நாடு முழுவதும் பிற மசூதிகளையும் தோண்டச் சொல்வார்கள் என இஸ்லாமியசட்ட வாரியத்தின் உறுப்பினர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி தோண்டு பணிதொடங்கிவிட்டது.
தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நேற்று முதல் இந்த ஆய்வுப் பணியை நடத்தி வருகின்றனர். நேற்று மாலைதோண்டிக் கொண்டிருந்தபோது ஒரு உடைந்த மண் குவளை கிடைத்தது. இது தவிர வேறெதுவும் இல்லை.வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ், வக்பு வாரியம், இஸ்லாமிய சட்ட வாரியம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தபிரதிநிதிகளின் மேறபார்வையில் இந்தப் பணி நடந்து வருகிறது.
இந் நிலையில் அயோத்தியைப் போல பிற இடங்களில் உள்ள முக்கியமான மசூதிகள், இஸ்லாமிய அரசர்கள்காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சின்னங்களையும் தோண்டிப் பார்க்க வலியுறுத்துவோம் என விஸ்வ ஹிந்துபரிஷத் கூறியுள்ளது.
அந்த அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சம்பத் ராய் அயோத்தியில் நிருபர்களிடம் பேசுகையில்,
ராமர் கோவிலை கட்டியே தீருவோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.இதனால் வரும் 27ம் தேதி முதல் டெல்லியில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவோம். ஒரு வார காலம் இப்போராட்டம் நடக்கும். நாங்கள் கேட்டபடி இங்கு தோண்டிப் பார்க்கும் பணி தொடங்கிவிட்டது.
இனி மதுரா, காசி போன்ற இடங்களிலும் தோண்டிப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துவோம். இதை நாங்கள் கேட்கவேண்டியது கூட இல்லை. நீதிமன்றங்களும் அரசும் தோண்டச் சொல்லி தாங்களாகவே உத்தரவிடலாம்.
இந்த இடத்தில் ஜெயின் கோவில் இருந்ததாக அந்த சமூகத்தினர் கூறியுள்ளனர். அயோத்தியில் 5 தீர்த்தங்கராக்கள்இருந்தன. மசூதி கட்டப்பட்ட இடத்தில் கீழே ஒரு கோவில் இருந்தது. அது இந்துக்கள், ஜெயின்கள் அல்லதுபுத்தமதக் கோவிலாகக் கூட இருக்கலாம் என்றார்.
இதற்கிடையே இன்று தோண்டும் பணி நடக்கும் இடத்தைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பியைச் சேர்ந்தநூற்றுக்கணக்கானோர் சர்ச்சைக்குரிய இடத்தின் வெளியே குவிந்தனர். அவர்கள் ராமர் கோவில் கட்டுவோம் எனகோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்துமத்திய ரிசர்வ் படை போலீசார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.
இந் நிலையில் வரும் 15ம் தேதி இஸ்லாமியர்களின் முகரம் பண்டிகை வருவதால் பிரச்சனை ஏதும் வெடிக்காமல்தடுக்க கூடுதல் மத்தியப் படைகள் அயோத்தி நகரில் குவிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications