வேட்பாளர்கள் சொத்து, படிப்பு, வழக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி
டெல்லி:
கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு வசதியாகக் கொண்டு வரப்பட்ட தேர்தல் சீர்திருத்தச் சட்டமே சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தச் சட்டத்தை ரத்து செய்யவும் நீதிமன்றம் அதிரடியாகஉத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பில் தேர்தலில் போட்டியிடும்அரசியல்வாதிகள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே தங்களது சொத்து விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்,தங்கள் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் மக்களுக்குத் தெரிவிக்க, தங்களது படிப்புவிவரத்தையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், தங்களது சொத்து விவரத்தையும் படிப்பு விவரத்தையும் கேட்கும் இந்த விதியை கிரிமினல் புத்திகொண்ட அரசியல்வாதிகள் உடனே எதிர்த்தனர். இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பா.ஜ.க. அரசுகூட்டியது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சிகளும் கூறின.
எல்லா விஷயத்தில் ஆளும் கட்சியுடன் மோதும் எதிர்க் கட்சிகள் இந்த சொத்து மற்றும் கிரிமினல் விஷயத்தில்மட்டும் ஆளும் கட்சியுடன் ஒத்துப் போயினர். இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவை முடக்கும் வகையில் தேர்தல்சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டியதில்லை, தங்கள் மீதானவழக்குகள் விவரத்தையும் வெளியில் சொல்ல வேண்டியதில்லை, படிப்பு விவரததையும் வெளியிடவேண்டியதில்லை என்றானது.
தேர்தலில் வெற்றி பெறுபவர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தர வேண்டும், கிரிமனல் வழக்கில் ஆதாரம்இருப்பதாக நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட வேட்பாளர் மட்டும் அதன் விவரத்தைத் தந்தால் போதும், படிப்புவிவரத்தை யாரும் தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டியதே இல்லை என்று அச் சட்டம் மூலம் வழிவகுக்கப்பட்டது.
எல்லா கட்சிகளும் சேர்ந்து இச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி நல்ல காரியம் செய்ய முயன்ற உச்சநீதிமன்ற உத்தரவை முடக்கின.
ஆனால், இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் எம்.பி. ஷா,பி.வி.ரெட்டி, தர்மாதிகாரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து இன்று அதிரடி தீர்ப்புவழங்கியது.
நீதிபதிகளின் தீர்ப்பு விவரம்:
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சீர்திருத்தச் சட்டமே சட்ட விரோதமானது. தங்கள் தொகுதியில்தேர்தலில் போட்டியிடும் நபர் என்ன படித்திருக்கிறார்?, அவரது சொத்து விவரம் என்ன? அவரது குடும்பஉறுப்பினர்களின் சொத்து விவரம் என்ன? அவர் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன போன்ற விவரங்களைத்தெரிந்து கொள்ளும் உரிமை பொது மக்களுக்கு உண்டு.
சட்டத்தைக் கொண்டு வந்து இந்த உரிமையை அரசு பறித்துவிட முடியாது. இதன் மூலம் மக்களின் அடிப்படைஉரிமையைப் பறிக்க முயற்சி நடந்துள்ளது. அரசியல் சட்டத்தின் 19வது பிரிவின்படி தாங்கள் யாருக்குவாக்களிக்கிறார்களோ அவர்கள் குறித்த அனைத்து விவரத்தையும் அறிய மக்களுக்கு முழு உரிமை உண்டு.
நீங்களாக (அரசு) ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இந்திய அரசியல் சட்டம் தந்துள்ள உரிமையை பறிக்கமுயன்றுள்ளீர்கள். இதனால் அந்தச் சட்டத்தையே நாங்கள் ரத்து செய்கிறோம். இனி அந்தச் சட்டம் செல்லாது.
இன்றைய தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் உடனடியாக புதிய விதிமுறைகளை அறிவிக்கவும்உத்தரவிடுகிறோம்.
தேர்தல்களில் போட்டியிடும் கிரிமினல்களுக்கும், பண பலம் படைத்தவர்களுக்கும் ஆதரவாக இந்தச் சட்டததைமத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவை முடக்கும் வகையில் சட்டம் கொண்டு வரநாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
தேர்தலில் போட்டியிடும் நபரைப் பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லை என்று கூறநாடாளுமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் என்ன உரிமை இருக்கிறது? நாங்கள் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம்கொடுத்த தீர்ப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
மக்களின் உரிமையைப் பறிக்கும் சட்டம் செல்லாது. அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
இதனால் இனி பஞ்சாயத்துத் தேர்தலில் இருந்து எம்.பி. தேர்தல் வரை போட்டியிடும் அனைத்துக் கட்சி மற்றும்சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது படிப்பு விவரத்தை முதலில் சொல்லியாக வேண்டும். அடுத்ததாக தனது சொத்து,குடும்பத்தினரின் சொத்து விவரத்தை வெளியிட வேண்டும். மூன்றாவதாக தங்கள் மீதுள்ள வழக்கு விவரத்தையும்தேர்தல் கமிஷனிடம் தர வேண்டும்.
கிரிமினல் வழக்கு விவரத்தை வைத்து அவர்களது வேட்பு மனுவை ஏற்பதா இல்லையா என்பதை தேர்தல் கமிஷன்முடிவு செய்யும். இதனால் கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications