கோவிலுக்குள் புதைந்திருந்த 19 பஞ்சலோக சிலைகள் மீட்பு
காரைக்கால்:
பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே கோவில் வளாகத்தில் புதைந்திருந்த 16 பஞ்சலோக சிலைகள்மீட்கப்பட்டன.
காரைக்கால் அருகே உள்ள அகலன்கன்னு கிராமத்தில் மிகப் பழமையான வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பகுதியைத் தோண்டிக் கொண்டிருந்தபோது இந்த சிலைகள் கிடைத்தன.
மொத்தம் 16 சிலைகள் புதையுண்டு இருந்தன. இவற்றில் 2 விநாயகர் சிலைகள், 2 சிவன் சிலைகளும் அடங்கும்.இந்தச் சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆராய்வதற்காக தொல்பொருள் துறையினரிடம்ஒப்படைக்கப்பட உள்ளன.
சிலை திருடிய ஐவருக்கு சிறை:
இதற்கிடையே, அரியலூர் அருகே கோவில் சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே உள்ள மிகவும் பழமையான ஸ்ரீவேதநாராயணன் கோவிலில் கடந்த 1986ம் ஆண்டு 8 பேர் கொண்ட கும்பல்நுழைந்து அங்கிருந்த ஸ்ரீதேவி, பெருமாள் ஆகியோரின் வெண்கலச் சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையின்போதே 3 பேர் இறந்துவிட்டனர்.மற்ற 5 பேருக்கும் அரியலூர் நீதிமன்றத்தில் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications