ஹாவாலா பணம் ரூ.20 லட்சத்துடன் மூவர் கைது
சென்னை:
சென்னையில் ரூ.20 லட்சம் பணத்துடன் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலை- ஐசக் சாலை சந்திப்பில் சந்தேகததிற்கிடமான வகையில் 3 பேர்திரிந்தனர். அவர்களது கையில் சூட்கேசும் இருந்தது.
இந்த மூவரையும் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களதுபெயர் ஜெயந்திலால், ராமு, வாசு என்று தெரியவந்தது. இதில் வாசு ராமுவின் மகன் என்றும்தெரிந்தது.
விசாரணையில் மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே அவர்களது பெட்டியைபரிசோதித்தனர். பெட்டி நிறைய நூறு ரூபாய் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் ரூ. 20 லட்சம்இருந்தது. கட்டுக்களின் மேல் பேப்பர்கள் சுற்றப்பட்டு அதில் ஏதோ ரகசிய முத்திரையும்குத்தப்பட்டிருந்தது.
பணம் குறித்து கேட்டபோது தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆந்திர மாநிலம்
நெல்லூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்தனர்.
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கே.பி. என்பவரிடம் இந்தப் பணத்தைக்கொடுத்துவிடுமாறு சுரேஷ் கூறியதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
இது ஹாவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்படும் பணம் என்று தெரிகிறது. இதையடுத்து இந்தமூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுரேஷையும் கே.பி. என்பவரையும் கைது செய்யும் முயற்சிகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications