சிறப்பு விமானத்தில் ஜெ. இன்று நெல்லை வருகிறார்
திருநெல்வேலி:
அரசுத் திட்டப் பணிகளைத் துவக்கி வைப்பதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிமாவட்டங்களில் இன்று முதல் முதல்வர் ஜெயலலிதா 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். உடன்சசிகலாவும் வருகிறார்.
இதற்காக இன்று அவர் சிறப்பு விமானத்தில் நெல்லை புறப்படடுச் செல்கிறார். பெங்களூர் பீர்தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் செஸ்னா விமானத்தை ஜெயலலிதா பயன்படுத்துவார் என்றுதெரிகிறது. சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது இந்த விமானத்தைத் தான் அவர்பயன்படுத்தினார்.
பிற்பகல் 1.50 மணிக்கு இந்த விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம்சென்றடைகிறார்முதல்வர்ஜெயலலிதா. அங்கிருந்து நெல்லையில் உள்ள அண்ணாஸ்டேடியத்திற்குச் செல்கிறார்.
அங்கு மாலை 3 மணிக்கு ரூ.438.73 கோடி திட்டப் பணிகளை துவக்கி வைத்துப் பேசுகிறார்.
பின்னர் தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகநேரியில் உள்ள தரங்கதாரா நிறுவனத்தின் கெஸ்ட்ஹவுசில் ஓய்வு எடுக்கிறார். இடைத் தேர்தலின்போது ஜெயலலிதாவுக்காக இந்த கெஸ்ட் ஹவுட் பலலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
நாளை சாத்தான்குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ 158 கோடிஅளவிலான தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
முதலில் தூத்துக்குடியில் நடப்பதாக இருந்த இந்த விழாவை சாத்தான்குளத்துக்கு ஜெயலலிதாமாற்றிவிட்டார். அங்கு தேர்தல் வெற்றி விழாவைப் போல இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. தேர்தல்பிரச்சாரத்தின்போது சாத்தான்குளத்துக்கு பல வாக்குறுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா.
அவற்றில் சில திட்டங்களை இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா அறிவிப்பார் என்று தெரிகிறது.
நாளை மறுதினம் நாகர்கோவில் செல்லும்ஜெயலலிதா அங்கு கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகளைத் துவக்கி வைக்கிறார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி இந்த மாவட்டங்களில் அவர் பயன்படுத்தப்பட உள்ளசாலைகள் அனைத்தும் மீண்டும் போடப்பட்டுள்ளன.
அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க மாவட்ட மாவட்டமாக ஜெயலலிதா பயணம் செய்து வருகிறார்.முதல்வரின் வருகைக்காக ஆட்களைத் திரட்ட, அவர்களுக்கு சோறு போட என ஒவ்வொரு பஞ்சாயத்தும் சுமார் ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பஞ்சாயத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தைக்கூட்டி வர வேண்டிய பொறுப்பு பஞ்சாயத்துகளை கவனிக்கும் ஊரக வளர்ச்சித்துறையிடம் தரப்படுகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications