12 வருடமாய் மூடிக் கிடக்கும் கல்லூரி நூலகம்
தர்மபுரி:
தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் ஊழியர்கள் இல்லாத காரணத்தால் கடந்த 12 வருடமாககல்லூரி நூலகம் மூடிக் கிடக்கிறது.
தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் மொத்தம் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவுமே மருந்துக்கூட கிடையாது என்று மாணவர்கள்குமுறுகிறார்கள்.
குடிநீர் வசதி கிடையாது. இதனால் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் உண்டு. கழிப்பறைகிடையாது. இதனால் மாணவர்கள் திறந்த வெளியில் தான் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. இதனால்மாணவிகள் படும்பாடு சொல்லி மாளாது.
வகுப்பறைகள் கூரை பெயர்ந்து போய் எப்போது தலையில் விழுமோ தெரியாது என்ற நிலையில்உள்ளன.
இதற்கெல்லாம்முத்தாய்ப்பாக கல்லூரியில் உள்ள நூலகம் கடந்த 12 வருடமாக மூடியேகிடக்கிறதாம். என்ன காரணம் என்று மாணவர்கள் விசாரித்தபோதெல்லாம் நூலகத்திற்கு சரியானஊழியர்கள் கிடைக்கவில்லை என்று பதில் வருகிறதாம்.
கிட்டத்தட்ட 12 வருடங்களாக மூடிக் கிடப்பதால் உள்ளே இருக்கும் பெரும்பாலான புத்தகங்கள்நிச்சயம் செல்லரித்துப் போயிருக்கும் என்று புலம்புகிறார்கள் மாணவர்கள். புத்தகங்கள் அனைத்தும்இந்நேரம் கரையான்களால் சாப்பிடப்பட்டு, பூச்சிகளால் குடையப்பட்டு கந்தல் கந்தலாகத் தான் இருக்கும் என்பதுநிச்சயம்.
இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் சமீபத்தில் நூலகத்தை உடனடியாகத் திறக்கக் கோரியும்கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்மேற்கொண்டனர்.
சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் காலவரையின்றி கல்லூரியை புறக்கணிப்போம்எனவும் எச்சரித்துள்ளனர்.
அரசின் செவிட்டுக் காதுகளுக்கு இந்த எச்சரிக்கைக் குரல் கேட்குமா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications