ஈராக்- அமெரிக்கா பிடிவாதம்: பிரான்சும் பிடிவாதம்
ஐ.நா. சபை:
ஈராக்குக்கு 17ம் தேதி வரை தான் நேரம் தர முடியும். அதற்குள் பேரழிவு ஆயுதங்களை ஒழிக்காவிட்டால்தாக்குவோம் என அமெரிக்கா மீண்டும் கண்டிப்புடன் கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலை அனுமதிக்கும் இரண்டாவது தீர்மானத்துக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நாடுகளின்பெரும்பாலான நாடுகளின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தவுடன் அதன் மீதான ஓட்டெடுப்பை ஒத்திவைக்குமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
இப்போது அந்த ஓட்டெடுப்பு ஒரு பக்கம் இருந்தாலும் 17ம் தேதிக்கு மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதுஎன அமெரிக்கா கூறியுள்ளது.
தனது தீர்மானத்துக்கு ஆதரது கேட்டு ரஷ்யா, பாகிஸ்தான் அதிபர்களுடன் புஷ் நேற்றும் தொலைபேசியில்பேசினார். அப்போது ஈராக்கை ஆதரிப்பதால் அமெரிக்க- ரஷ்ய உறவு சீர்கெடும் எனவும் புஷ் தெரிவித்தார்.
ஆனால், தனது நிலையை மாற்றிக் கொள்ள புடின் மறுத்ததுவிட்டார். பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக் கொண்டுதீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என புஷ் கேட்டுக் கொண்டார். ஆனால், முஷாரப் பதில் ஏதும் தரவில்லை.
இந் நிலையில் அமெரிக்காவின் தீர்மானம் எப்போது ஓட்டெடுப்புக்கு வந்தாலும் அதை வீடோ அதிகாரத்தைவைத்து நிராகரிப்போம் என பிரான்ஸ் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் பிரான்சுக்கு உரியநேரத்தில் பாடம் புகட்டப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தச் செயல்மூலம் சதாம் ஹூசேனுக்கு பிரான்ஸ் தைரியத்தைத் தந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறைகூறியுள்ளது.
இந் நிலையில் ஈராக்குக்கு பிரிட்டன் 6 புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ரசாயான ஆயுதங்களைஒப்படைக்க வேண்டும், டிவியில் பகிரங்கமாக உலக நாடுகளிடம் சதாம் ஹூசேன் மன்னிப்பு கேட்க வேண்டும்ஆகியவை அதில் சில. ஆனால், இந்த உத்தரவுகளை ஈராக் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என பிரான்ஸ்கூறியுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications