"அரசிப்பட்டி"யிலும் கடும் குடிநீர்ப் பஞ்சம்
தேனி:
முன்னாள் முதல்வர் கருணநிதின் தொகுதியான சேப்பாக்கத்தில் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவி வரும்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் கடுமையானகுடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தல் நடந்தபோது ஆண்டிப்பட்டியை "அரசிப்பட்டி"ஆக்குவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்ஜெயலலிதா. ஆனால் தற்போது இங்கு கடுமையானகுடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது.
ஆண்டிப்பட்டிக்கு வைகை ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தொகுதியில்வெற்றி பெற்றவுடன் ஆண்டிப்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை ஜெயலலிதா துவக்கிவைத்தது நினைவிருக்கலாம்.
தற்போது அணையில் நீர் இல்லாததாலும், கோடைகாலம் வறுத்தெடுப்பதாலும் அங்கு குடிநீருக்குப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆண்டிப்பட்டி சுற்றுப் பகுதியில் குடிநீர்விநியோகம் இல்லாத காரணத்தால் மக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்கக் கோரி, ஆண்டிப்பட்டி நகராட்சி ஆணையர்அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த பின்னரேமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-->


Click it and Unblock the Notifications
