மும்பை ரயிலில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி
மும்பை:
மும்பை புறநகர்ப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஒரு ரயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டுபயங்கரமாக வெடித்துச் சிதறியதில் 2 பெண்கள், 2 பெண் போலீசார் உள்பட 12 பேர்உயிரிழந்தனர். மேலும் 65 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து கர்ஜத் என்ற இடத்திற்கு நேற்று இரவு ஒரு ரயில்கிளம்பிச் சென்றது.
அந்த ரயில் இரவு சுமார் 8 மணிக்கு முனுந்த் ரயில் நிலையத்தைச் சென்று சேர்ந்த போது அதிலிருந்தபெண்கள் முதல் வகுப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பயங்கரச் சத்தத்துடன்வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் 2 பெண் போலீசார் உள்பட 4 பேர்பெண்கள் ஆவர்.
மேலும் சுமார் 65 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் முனுந்த்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில் நிலைய பிளாட்பாரங்களில் நின்று கொண்டிருந்தபல பயணிகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர்.
இந்தக் குண்டு வெடிப்பில் அந்தப் பெண்கள் பெட்டியின் மேற்கூரை தனியாகக் கழன்று விழுந்தது.மேலும் மூன்று பெட்டிகள் கடுமையாகச் சேதம் அடைந்தன.
இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. வெடித்த குண்டுபயங்கரமான ஆர்.டி.எக்ஸ். வகையைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்து சரியாக 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதைத்தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப்பாதுகாப்புகளையும் மீறி தற்போது குண்டு வெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குண்டு வெடிப்பு ஒரு தீவிரவாதத் தாக்குதல்தான் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் மும்பையில் நடைபெறும் நான்காவது குண்டு வெடிப்புச் சம்பவம் இதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மும்பைக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்துசெய்யப்பட்டன. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லி உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், விமானநிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மும்பையில் ஒரு பஸ்சில் பை ஒன்று அநாதையாகக் கிடந்தது பெரும் பதற்றத்தைஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அதைச் சோதனையிட்டபோது அதில்துளையிடும் மெஷின் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பையின் சொந்தக்காரர் பின்னர் அங்குவந்து அதைப் பெற்றுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications