மேலும் 41 தமிழக மீனவர்கள் விடுதலை: மண்டபம் திரும்பினர்

Subscribe to Oneindia Tamil

மண்டபம்:

இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடிக் கொண்டிருந்த 41 தமிழகமீனவர்கள் நேற்று இரவு மண்டபத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

கடந்த வாரத் துவக்கத்தில் ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டமீனவர்கள் இலங்கை மீனவர்களால் கடத்திச் செல்லப்பட்டு அந்நாட்டில் உள்ள தலைமன்னார்சிறையில் வைக்கப்பட்டனர்.

ஆனால் கடந்த வியாழக்கிழமையே 93 மீனவர்களை தலைமன்னார் நீதிமன்றம் விடுவித்தது. அன்றேஅவர்கள் ராமேஸ்வரத்திற்குத் திரும்பி விட்டனர்.

ஆனால் இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எஞ்சிய தமிழக மீனவர்களையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் தமிழக மீனவர்களையும்,கடலில் மூழ்கி விட்ட 8 படகுகளையும் உடனடியாக மீட்காவிட்டால் தீக்குளித்து சாகப்போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருந்த எஞ்சிய 41 மீனவர்களை அந்நாட்டு அரசுவிடுதலை செய்தது. இந்த 41 மீனவர்களும் நேற்று காலையிலேயே மண்டபத்திற்குத் திரும்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழியில் ஒரு படகின் என்ஜின் பழுதடைந்து விட்டதால் அதைச் சரி செய்து திரும்புவதற்குக்கால தாமதம் ஆனது. அவர்கள் மண்டபத்திற்கு வந்து சேரும் வரை அவர்களுடைய உறவினர்கள்அனைவரும் கடற்கரையிலேயே காத்துக் கிடந்தனர்.

பின்னர் நேற்று இரவு 11 மணிக்கு 41 மீனவர்களும் 6 படகுகள் மூலம் மண்டபம் வந்து சேர்ந்தனர்.அவர்களுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் அவர்களை ஆனந்தக் கண்ணீருடன்வரவேற்றனர்.

இதற்கிடையே மேலும் 4 தமிழக மீனவர்கள், 4 படகுகளுடன் இலங்கை சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+