ஜெர்மன் "கிரீன் கார்டு" நிறுத்தம்: இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு வரும் ஜூலை 31ம் தேதி முதல் "கிரீன் கார்டு"வழங்குவதை நிறுத்த ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய சாப்ட்வேர்என்ஜினியர்கள் பாதிப்புக்கு உள்ளாவர் என்று தெரிகிறது.

இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜெர்மனியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய சாப்ட்வேர்என்ஜினியர்களை ஈர்ப்பதற்காகவே கிரீன் கார்டு தர ஜெர்மனி முன் வந்தது. இதனால் ஏராளமானஇந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் அந் நாட்டு நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்தனர். அங்கேயேதங்கி பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு முதல் இதுவரை ஜெர்மனி வழங்கியுள்ள 13,500 "கிரீன் கார்டு"களில் சுமார் 3,200கார்டுகள் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டன.

சாதாரணமாக ஜெர்மனியில் பணிபுரிவதற்கான உரிய அனுமதியைப் (தீணிணூடு ணீஞுணூட்டிணா) பெற வேண்டும்என்றால் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். மேலும் அங்கு இனரீதியிலான தொல்லைகளும்உண்டு. இதனால் அங்கு செல்ல முதலில் இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் "கிரீன் கார்டு" தர முன் வந்ததாலும், அதையும் விண்ணப்பித்த ஒரே வாரத்தில்கொடுத்ததாலும் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஜெர்மனி செல்ல ஆரம்பித்தனர்.

இந் நிலையில் வரும் ஜூலை 31ம் தேதியுடன் "கிரீன் கார்டு" வழங்குவதை நிறுத்திக் கொள்ளப்போவதாக ஜெர்மன் அரசு திடீரென அறிவித்துள்ளது. இதனால் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள்இனி ஜெர்மனியில் பணிபுரிவது சிரமமாகும்.

மேலும் ஜெர்மனி நிறுவனங்களுக்காக சாப்ட்வேர் எழுதி வரும் இந்திய என்ஜினியர்கள் அடிக்கடிஅங்கு சென்று வருதிலும் பிரச்சனைகள் எழும்.

இதனால் "கிரீன் கார்டு"களை மீண்டும் வழங்குவது குறித்து ஜெர்மன் அரசு மீண்டும் பரிசீலனைசெய்ய வேண்டும் என்று இந்திய சாப்ட்வேர் தொழில்துறைக் கூட்டமைப்பான "நாஸ்காம்"கோரிக்கை விடுத்துள்ளது.

"கிரீன் கார்டு" வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால் சாப்ட்வேர் புராஜக்டுகளை உடனுக்குடன் ஜெர்மன்வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+