"தாய்" மொழிபெயர்ப்புக்காக கொடைக்கானல் சென்றார் கருணாநிதி
சென்னை:
ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய "தாய்" காவியத்தை கவிதை நடையில் மொழிபெயர்த்துஎழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். ஒரு வாரம் வரைஅங்கு தங்கியிருந்து "தாய்" கவிதை வடிவத்தை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.
சமீபகாலமாக இலக்கியத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார் கருணாநிதி.தொல்காப்பியத்திற்கு எளிய நடையில் உரை எழுதி, "தொல்காப்பியப் பூங்கா" என்று அதற்குப்பெயரிட்டு சமீபத்தில் வெளியிட்டார் அவர்.
பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ள அந்த நூல் வெளியிட்ட சில நாட்களுக்குள்ளாகவே நான்குபதிப்புகளைக் கண்டுவிட்டது.
இதைத் தொடர்ந்துதான் "தாய்" நூலை தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்து வெளியிடகருணாநிதி முடிவு செய்துள்ளார்.
சென்னையில் அமைதியாக உட்கார்ந்து எழுத முடியாது என்பதால் கொடைக்கானல் சென்றுமொழிபெயர்ப்பில் ஈடுபட முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில் மூலம் நேற்று கருணாநிதிகொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஏராளமான திமுகவினர் உற்சாகமான வரவேற்புஅளித்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்குச் சென்றார். வழியில் கவிஞர்வைரமுத்துவின் பண்ணை வீடு உள்ள கெங்குவார்பட்டியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர்கொடைக்கானல் சென்றார் கருணாநிதி.
வரும் 21ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து நூலை எழுதி முடித்துவிட்டு அதன் பிறகே அவர்சென்னை திரும்புகிறார்.
கொடைக்கானலில் இருக்கும்போது யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்றுதிமுகவினருக்கு கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications