வட்டி கடைக்காரரிடம் பணம் பறிப்பு: இன்ஸ்பெக்டர், 3 போலீசார் அதிரடி கைது
சென்னை:
சென்னையில் வட்டிக் கடைக் அதிபரை மிரட்டிப் பணம் பறித்த அண்ணாசாலை காவல்நிலைய போலீஸ்இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் வட்டிக் கடை நடத்தி வருகிறார். அவர் ஏராளமானகறுப்புப் பணத்தை சிலரிடம் கொடுத்து தங்கக் கட்டிகள் பெற்றுள்ளதாக சமீபத்தில் சென்னைஅண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேலும் ஒரு நகைத் திருட்டு வழக்கும்பதிவானது.
இதையடுத்து அண்ணாசாலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார்பக்தவச்சலத்தின் வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தினர். பல தங்கக் கட்டிகளும் அப்போதுபிடிபட்டன.
அதுவரை ஒழுங்காக செயல்பட்ட போலீசார் இந்த இடத்தில் தான் புத்தியைக் காட்டியுள்ளனர்.பக்தவச்சலத்தை தனியாக அழைத்த இன்ஸ்பெக்டர் கர்ணண், தனக்கு ரூ.8 லட்சம் தருமாறும்அவ்வாறு தந்தால் தங்கக் கட்டிகளைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து கர்ணண் மற்றும் உடன் வந்த போலீசாருக்கு முன் பணமாக ரூ.2 லட்சத்தை பக்தவச்சலம்கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரைப் போலீசார் விட்டு விட்டனர்.
ஆனால், இதன் பின்னர் நேராக சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிடம் சென்றபக்தவச்சலம், தன்னை இன்ஸ்பெக்டர் கர்ணன் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகப் புகார் கொடுத்தார்.இதையடுத்து கமிஷனர் உத்தரவின் போரில் கர்ணன், அவருடன் சேர்ந்து லஞ்சம் வாங்கியபோலீசாரான லட்சுமிபதி, ஜமாலுதீன் மற்றும் கனகராஜ் ஆகியோர குற்றப் பிரிவு போலீசார் இன்றுகைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கிருஷ்ணசாமி உத்தரவிட்டார். இதையடுத்துநால்வரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
லஞ்சம் வாங்கிய ஒரு இன்ஸ்பெக்டரும் 3 போலீசாரும் கைது செய்யப்பட்டது காவல்துறைவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications