அயோத்தி: மசூதி தரை தட்டுப்பட்டதால் தோண்டும் பணி நிறுத்தம்
அயோத்தி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் முகரம் பண்டிகையொட்டி ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்ட தோண்டும் பணிஇன்று மீண்டும் தொடங்கியது.
தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் மேற்பார்வையில் மீணடும் தோண்டும் பணியில் தொழிலாளர்கள்ஈடுபட்டனர். அப்போது இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தரைப் பகுதி தட்டுப்பட்டது.
இதையடுத்து மேலும் தோண்டுவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்திவிட்டனர்.
இந்த இடித்தில் இருந்த பாபர் மசூதி 1991ம் ஆண்டு டிசம்பரில் இடிக்கப்பட்டது. அங்கு ஒரு தாற்காலிக ராமர்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டுத் தான் மசூதி கட்டப்பட்டதாககூறப்படுவதால் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க உத்தரவிடப்பட்டது.
இன்று தோண்டும் பணி நடந்தபோது இடிக்கப்பட்ட மசூதியின் தரைப்பகுதி வெளியே தெரிந்தது. இதனால்மேற்கொண்டு தோண்டுவதா இல்லையா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பினர்.
தங்களை அகழ்வாராய்ச்சி நடத்தச் சொல்லி உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்றத்திடம் கேட்டுவிட்டு அடுத்தகட்டப்பணியை மேற்கொள்ள தொல்பொருள்துறை அதிகாரிகள் முடிவு செய்து பணியை நிறுத்திவிட்டனர்.
வக்பு வாரியம் எதிர்ப்பு:
இந் நிலையில் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிலோ, அல்லது பணியை மேற்பார்வையிடும்அதிகாரிகளிலோ முஸ்லீம்கள் யாரும் இல்லை, வேண்டுமென்றே முஸ்லீம்களை ஒதுக்கிவிட்டு இந்தத் தோண்டும்பணி நடத்தப்பட்டு வருகிறது என வக்பு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
அகழ்வராய்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 52 தொழிலாளர்களில் ஒருவர் கூட ஏன் முஸ்லீம் இல்லை எனஇந்த வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் சங்குகள், அரிய கற்கள், 1920ம் ஆண்டு செய்யப்பட்ட 2 செங்கல்கள்ஆகியவை தான் கிடைத்துள்ளன.
இதற்கிடையே அயோத்தியில் கோவில் கட்டக் கோரி பா.ஜ.க., வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள்வரும் 23ம் தேதி டெல்லியில் நடத்தும் சத்தியாகிரஹத்துக்கு ஒரு கோடி சாதுக்கள் வருவார்கள் என்று அந்தஅமைப்புகள் அறிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications