திருமாவளவன் போல பேசி பாதிரியார்களிடம் பண மோசடி
பாண்டிச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் மாதிரிப் பேசிபாண்டிச்சேரியில் உள்ள 2 பாதிரியார்களிடம் ரூ.15,000 பணம் மோசடி செய்த சென்னையைச்சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் ஜோசப் என்ற ரவி. இவர் பாண்டிச்சேரியில் உள்ள இமாகுலேட் கதீட்ரல்சர்ச் பிஷப்பிற்கு போன் செய்துள்ளார்.
திருமாவளவன் பேசுவதாகக் கூறிக் கொண்ட அவர் தனது கட்சியின் சார்பில் ஏழைகளுக்கு இலவசமூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப் போவதாகவு அந்த நிகழ்ச்சியில் பிஷப் கலந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தன்னால் விழாவில் கலந்து கொள்ளமுடியாத நிலை உள்ளதாக பிஷப் கூறியுள்ளார்.அப்படியென்றால் மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்க நிதியுதவி செய்யுமாறு ரவி கேட்டுள்ளார. அதைபிஷப் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ரவி என்ற ஜோசப்பை நேரில் அனுப்புவதாகவும் அவரிடம் செக் கொடுத்துஅனுப்புமாறும் கூறியுள்ளார் "திருமாவளவன்".
சிறிது நேரத்தில் பிஷப்பிடம் சென்ற ரவி அவர் கொடுத்த ரூ.10,000க்கான செக்கை வாங்கிக்கொண்டு சென்றார்.
இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி அந்தோணிச்சாமி என்ற பாதிரியாரிடமும் ரூ. 5000வாங்கியுள்ளார் ரவி.
பணம் வந்து சேர்ந்ததா என்பதைத் தெரிந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தைஇரு பாதிரியார்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தான் மோசடி நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி ரவி என்றஜோசப்பைக் கைது செய்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications