தமிழகத்தில் மின் கட்டணம் பயங்கர உயர்வு: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து
சென்னை:
தமிழகத்தின் மின் கட்டணம் மிக பயங்கர அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கான மின் கட்டணம் 23சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை சராசரியாக ரூ. 2.50 ஆக உயரும்.
மேலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் ரத்து செய்யப்படுகிறது. கட்டண உயர்வும், இலவச மின்சாரம்ரத்தும் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. குடிசைப் பகுதிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தரப்பட்டு வந்தமின்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலவச மின்சாரத்தை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 1,000 நிதியுதவி வழங்கும் எனமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மின் கட்டணம் கடுமையாக உயரலாம் என்ற செய்தியை நாம் கடந்த 11ம் தேதியே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் செயலாளர் பாலசுப்பிரமணியம் இன்று இந்தத்தகவலை உறுதி செய்தார்.
இதுவரை மாநில அரசு தான் மின்துறையின் கட்டணத்தை நிர்ணயித்து வந்தது. இப்போது இந்தப் பணி தமிழகமின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தரப்பட்டுவிட்டது. இனிமேல் இந்த ஆணையம் சொல்லும் கட்டணத்தைமாநில அரசு அமலாக்கும். அதன்படி கட்டண உயர்வுகள் அமலுக்கு வருகின்றன.
தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் சென்னையில் இன்று நிருபர்களிடம்கூறியதாவது:
வீடுகளுக்கான மின் கட்டணம் நாளை முதல் 22.13 சதவீதம் உயர்த்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கான மின்இணைப்புக்கு கட்டணம் 6.69 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
வீடுகளுக்குத் தரப்பட்டுள்ள இணைப்புக்கு இதுவரை 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 85 பைசா கட்டணமாகவசூலிக்கப்பட்டு வந்தது. இது இனி யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.10 ஆக உயர்த்தப்படுகிது.
50 முதல் 100 யூனிட் வரை கட்டணம் ரூ.1.30 ஆக உயர்த்தப்படும். (தற்போதைய கட்டணம் ரூ. 1.10). 101 முதல்200 யூனிட் வரை கட்டணம் ரூ.2.60 ஆக உயர்கிறது. (தற்போதைய கட்டணம் ரூ. 2.00).
201யூனிட் முதல் 600 யூனிட் வரை கட்டணம் ரூ.4.00 ஆக உயர்த்தப்படுகிறது. (தற்போதைய கட்டணம் ரூ. 3.00).
601 முதல் 1000 யூனிட் வரைக்கான கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (இப்போதுகட்டணம் ரூ. 4 ஆக உள்ளது). 1000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.00ஆக உயர்கிறது. இப்போது இது ரூ.4.50 ஆக உள்ளது.
(இந்தக் கட்டண உயர்வுகளும் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அளவில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)
விவசாயிகளின் பம்ப் செட்களுக்கான இலவச மின்சாரம் இன்றுடன் நிறுத்தப்படும். நாளை முதல் விவசாயிகள்யூனிட் ஒன்றுக்கு 20 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். மீட்டர் பொறுத்தப்பட்டாத பம்ப் செட்களைஉபபோகிக்கும் விவசாயிகள் 250 எம்.பி. திறன் கொண்ட பம்ப்புக்கு ஆண்டுக்கு ரூ. 250 கட்டணமாக செலுத்தவேண்டும்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கு 16.1 சதவீத அளவுக்கும், தொழில் நிறுவனங்களில் 10.25 சதவீத அளவுக்கும், கடைகள்போன்ற வியாபார நிறுவனங்களில் 19.96 சதவீதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு, இலவச மின்சாரம் ரத்து மூலம் மின்துறைக்கு ஆண்டுக்கு ரூ. 1,398.80 கோடிகூடுதலாகக் கிடைக்கும் என்றார் பாலசுப்பிரமணியம்.
இந்தக் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த 2001ம் ஆணடு டிசம்பரில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கட்டணத்தைதமிழக அரசு உயர்த்தியுள்ளது. 1984ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழகத்தில்விவசாயிகளுக்கு முதன்முறையாக இலவச மின்சாரம் தரப்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விவசாயிகளுக்குத் தரப்பட்ட இத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்துசெய்துள்ளார். அதே போல எம்.ஜி.ஆர். காலததில் குடிசைப் பகுதிகளுக்கு ஒரு விளக்கு போடப்பட்டு அதற்குயூனிட் ஒன்றுக்கு 50 பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதையும் இப்போது தமிழக அரசுரத்து செய்துள்ளது.
நிதியுதவி: ஜெ அறிவிப்பு
இந் நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்படும் 9.41 லட்சம் விவசாயிகளுக்கும்ஆண்டுதோறும் ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு இருமுறை தலா 500 ரூபாய் தரப்படும். கடும் நிதித் தட்டுப்பட்டுக்கு இடையிலும் தமிழக அரசு இந்ததைரியமான முடிவை எடுத்துள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதே போல குடிசைப் பகுதிகளுக்கான மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குஆண்டுதோறும் ரூ. 100 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 105 கோடி செலவாகும் என்று தெரிகிறது. முன்னதாக விவசாயிகளுக்கானஇலவச மின்சாரத்தை தொடர வேண்டுமானால், அதனால் மின்துறைக்கு ஏற்படும் நஷ்டத்தை தமிழக அரசு தான்ஈடு செய்ய வேண்டும் என மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கூறியது.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றிருந்தால் சுமார் ரூ. 700 கோடி வரை மின்துறைக்கு தர வேண்டிய நிலைஏற்பட்டிருக்கும். இதனால் அக் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இப்போது ரூ. 700 கோடிக்குப் பதில் ரூ.100 கோடியை மட்டும் இழப்பீடாகத் தர முன் வந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications