கார் மீது லாரி மோதி தீப் பிடித்தது: தலைமை ஆசிரியர், மனைவி, குழந்தை பலி
வேலூர்:
வேலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் இரு வாகனங்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் காரில் இருந்தகைக் குழந்தை, அதன் தாய், தந்தை மற்றும் காரின் டிரைவர் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.திருப்பத்தூரைச் சேர்ந்தவர் காட்வின் பரமானந்தம். இவர் குனிச்சி என்ற ஊரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
சென்னையில் நடந்து வரும் பெந்தகொஸ்தே மாநாட்டில் பங்கேற்பதற்காக தனது மனைவி டோரத்தி,3 வயது மகள்மெர்லின் ஆகியோருடன் டாடா சுமோ காரில் புறப்பட்டார். வேலூரை அடுத்த பொய்கைக் கிராமம் பகுதியில் கார்சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த லாரி தாறுமாறாக வந்தது. பயங்கர வேகத்தில் வேன் மீது மோதியது. இதில் கார்அப்பளமாய் நொறுங்கி தீப் பிடித்துக் கொண்டது. லாரியும் தீப் பிடித்துக் கொண்டது. இதில் காரில் இருந்தகாட்வின், டோரத்தி, மெர்லின் மற்றும் டிரைவர் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அந்த லாரி சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் பள்ளிகொண்டாவுக்குச் சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர்அதி வேகத்தில் வந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. லாரியின் டிரைவர் லேசானகாயமடைந்தான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்
விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை வேலூர்மாவட்டக் கலெக்டர் மோகன்தாஸ் இன்று காலை பார்வையிட்டார்.
இப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications