அடுத்தடுத்து பிறந்த 9 "டெஸ்ட் டியூப்" குழந்தைகள்: பழனியில் சாதனை
பழனி:
பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் உள்பட அடுத்தடுத்து 9சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்துள்ளன.
இங்குள்ள கே.வி. மருத்துவமனையில் ஐஸ்வர்யா செயற்கை கருத்தரித்தல் மையம் உள்ளது. இங்குசோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பெறுவதற்கான சிகிச்சை முறைகளை டாக்டர் சந்திரலேகாஅளித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குழந்தை பிறக்கவே வாய்ப்பு இல்லாத 20 பெண்களுக்குசோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற வைப்பதற்கான முயற்சிகளை டாக்டர் சந்திரலேகாமேற்கொண்டார்.
அதன்படி இவர்களில் 8 பெண்கள் கர்ப்பம் அடைந்தனர். அவர்களுக்கு சமீபத்தில் அடுத்தடுத்துபிரசவம் பார்த்தார் டாக்டர் சந்திரலேகா. 5 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 9சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
சோதனைக் குழாய் முறையில் ஒரே சுற்றில் 9 குழந்தைகள் பிறந்துள்ளது மருத்துவத் துறையில்சாதனையாகக் கருதப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் இரண்டரை முதல் மூன்றரை கிலோஎடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர் சந்திரலேகா தெரிவித்தார்.
"சென்னையில் 15 முதல் 20 சதவீதம்தான் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கான முயற்சி வெற்றிபெறுகிறது. ஆனால் பழனியில் 40 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம்இங்குள்ள மாசற்ற சுற்றுச் சூழல்தான்" என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழந்தைகளைப் பெற்ற பெண்களில் சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைபாக்கியமே இல்லாமல் தவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications