ஈராக்: அமெரிக்க போர் விமானங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை
பாட்னா:
வளைகுடா போர் ஏற்படும் பட்சத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வரும் அமெரிக்கப்விமானங்களை இந்தியாவில் அனுமதிக்க மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இன்று பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ், இது தொடர்பாக அமெரிக்கா கோரிக்கைவிடுத்தாலும் இந்தியா அதை நிராகரித்து விடும் என்றே நான் நினைக்கிறேன் என்றார்.
மேலும் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடாது என்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாகஇருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவிலக்கிக் கொண்டிருப்பது நம் நாட்டிற்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும்பெர்னாண்டஸ் கூறினார்.
இதற்கிடையே ஈராக் மீது போர் தொடுப்பது தொடர்பான இறுதிக் கட்ட நடவடிக்கைகளைஅமெரிக்கா மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் ஸ்பெயின் பிரதமர்ஜோஷ் மாரியா அஸ்னார் ஆகியோருடன் இன்று முக்கியமான ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதை எதிர்த்து உலகம் முழுவதும் தொடர்ந்துபேரணிகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. வாஷிங்டனில் நேற்றுபல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
இதற்கிடையே அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று சூழ்நிலையில், ஈராக் தன்ராணுவத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து போருக்கு ஆயத்தமாகி வருகிறது. நான்குபிரிவுகளுக்கும் தலைவராக ஈராக் அதிபர் சதாம் ஹூசேனே செயல்படுவார்.
ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின்னர் யார் யாரையெல்லாம் போர்க் குற்றங்களின் கீழ் கைது செய்யவேண்டும் என்ற பட்டியலை அமெரிக்கா தீவிரமாகத் தயாரித்து வருகிறது. இந்தப் பட்டியலில்சதாம் மற்றும் அவருடைய இரண்டு மகன்களின் பெயர்களும் முதலாவதாக உள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications