தமிழை ஆட்சி மொழி ஆக்கினால் இந்தி கற்றுக் கொடுக்க தமிழகம் தயார்": ஜெ.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தமிழை மத்திய ஆட்சி மொழியாக ஏற்றால் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்தியைக்கற்றுத் தர நானே பரிசீலனை செய்வேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் ரூ.154 கோடி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில்,

தமிழகத்திலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது.கல்விக்கு அரசியான கலைமகள் இங்குதான் வசிக்கிறாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது "தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிமாணவர்கள் இந்தி மொழியை விருப்ப மொழியாகப் படிக்க விரும்புகிறார்கள். அதற்கு தமிழக அரசுஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த 1998ல் தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்என்று நான் மத்திய அரசை வலியுறுத்தினேன்.

மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால் இதுவரை அந்தக் குழு நியமிக்கப்படவில்லை.

இப்போதும் மத்திய அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். ஒன்று, தமிழ் மொழியைஉயர் தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும். அடுத்து, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளையும்மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும்.

மலேசியாவில் கூட தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. இந்தியாவில் இருக்கக் கூடாதா? தமிழின்பெருமையை நன்கு உணர்ந்துள்ள மத்திய அமைச்சர் இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசிடம்வற்புறுத்துவார் என்று நம்புகிறேன்.

தமிழை இந்திய ஆட்சி மொழியாக அறிவித்தால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்தியை விருப்பமொழியாகக் கற்றுக் கொள்வதற்கு நான் பரிசீலனை செய்கிறேன் என்று பேசினார் ஜெயலலிதா.

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தமிழுக்கு ஆதரவாக தமிழக எம்.பிக்கள்அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் குரல் எழுப்பி அவையையே ஸ்தம்பிக்கச் செய்தனர்என்பது நினைவுகூறத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+