புலிகள்-இலங்கை அரசு இடையே 6வது சுற்று பேச்சு நாளை தொடக்கம்
டோக்கியோ:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 6வது சுற்று அமைதிப்பேச்சுவார்த்தைகள் நாளை ஜப்பானில் தொடங்குகின்றன.
கடந்த 10ம் தேதி இலங்கை கடற்படையினரால் தங்களுடைய சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டசம்பவத்தை இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது பெரிதுபடுத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்று புலிகளின்அரசியல் ஆலோசகரும், புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஆன்டன் பாலசிங்கம்கூறினார்.
தங்களுடைய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அமைதிப்பேச்சுவார்த்தைகளையே நிறுத்தி வைப்பது தொடர்பாகவும் புலிகள் முதலில் யோசித்தனர். பின்னர்தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, கடும் கண்டனத்தை மட்டும் தெரிவிக்க தற்போது முடிவுசெய்துள்ளனர்.
பாலசிங்கம், அவருடைய மனைவி அடேல் பாலசிங்கம், புலிகள் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவினர் ஏற்கனவே இலங்கையிலிருந்துஜப்பானுக்குக் கிளம்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் இலங்கை அரசு தரப்பிலான பேச்சுவார்த்தைக் குழுவினரும் ஜப்பானுக்குக் கிளம்பிச்சென்றுவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications