மலேசிய ஹாக்கி போட்டியிலிருந்து இந்தியா விலகல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மலேசிய போலீசாரால் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்ளிட்ட 270 இந்தியர்கள்தாக்கப்பட்டதன் எதிரொலியாக அந்நாட்டில் நடக்கவுள்ள ஹாக்கிப் போட்டியில் விளையாடஇந்தியா மறுத்து விட்டது.

மலேசியாவில் உள்ள பிரிக்ஸ்பீல்ட் பகுதியில் வசித்து வரும் இந்தியர்களை அந்நாட்டு போலீசார்கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

அவர்களின் பாஸ்போர்ட்டுகளைப் பிடுங்கி விசா பக்கங்களைச் சேதப்படுத்தியுள்ளனர் போலீசார்.மேலும் பல இந்தியர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முழங்காலிட்டு நிற்கச்சொல்லி கேவலப்படுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாப்ட்வேர் என்ஜினியர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக மலேசியாவில் நடைபெறவுள்ள அஸ்லான் ஷாஹாக்கிப் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.

அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டிகளில் விளையாட மத்திய அரசு அனுமதிக்காததால் இந்தப்போட்டிகளிலிருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் கே.பி.எஸ். கில்இன்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆறு நாடுகள் கலந்து கொள்ளும் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டிகள் வரும் 22 முதல் 30ம் தேதிவரை மலேசியாவில் நடைபெறவுள்ளன. ஆனால் இந்தியா இந்தப் போட்டிகளிலிருந்துவிலகியுள்ளது.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது நினைவுகூறத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+